காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Recommended Video

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. இடியுடன் கொட்டிய பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது .

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதாக குறிப்பிட்டார்.
வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.அடுத்து வரும் 24 மணி நேரத்திற்குள் வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை இருக்கும் என குறிப்பிட்டார். வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் பேசிய பாலச்சந்திரன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யு வாய்ப்புள்ளது என்றார். தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஜுன் 1-ம் தேதி முதல் தற்போது வரை வரை 89 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 24 சதவீதம் குறைவு.
கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வலுவாக பெய்கிறது எனவும் குறிப்பிட்டார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திரிபுவனத்தில் 9 செ.மீ மழையும் ஆரணி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழையும் உத்திரமேரூரில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்றார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications