சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு
Recommended Video

சென்னை: மழைக்காக தவமாய் தவமிருக்கும் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்தது.
வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு அடையாறு, கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், வில்லிவாக்கம், கொளத்தூர், ராயப்பேட்டை, ராயபுரம், காசிமேடு போரூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், கிண்டி, வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளிலும் நல்ல மழை கொட்டித் தீர்த்தது.
அதே போல புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்தது.
கடந்த சில வாரங்களாகவே சென்னையில் அவப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த மழையால் தலைநகர்வாசிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் தண்ணீர் பஞ்சம் சற்று குறையவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 4 மாதங்களாக சென்னையில் மழையேஇல்லாமல் வாட்டி வதைத்த வெயிலால் மிகவும் சிரமத்தை எதிர் கொண்டு வருகிறோம். ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக இரவில் நல்ல மழை பெய்கிறது.
கிளைமேட்டும் அவப்போது குளிர்ச்சியாக மாறுகிறது. இதனை நன்றாக என்ஜாய் செய்வதாக தலைநகர்வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மழை இதே போல சில நாட்களுக்கு நீடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் நல்ல மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர துவங்கியுள்ளது. தண்ணீர் பிரச்சனையும் சிறிது தீர்ந்துள்ளது என குறிப்பிட்டனர் மக்கள்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications