312 kA! பல வருஷமா இப்படி நடந்ததே இல்லை.. பேய் மழைக்கு இடையே.. சென்னை அருகே அதிகாலையில் நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் அதிக அளவில் தாக்கி வருகிறது. மின்னல் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

வடகிழக்கு பருவமழையின் வீரியம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் சென்னையில் பெய்ததை விட இந்த வாரம் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சென்னையில் தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை மழை

சென்னை மழை

இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டில் மின்னல் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறிப்பாக ஒரு இடத்தில் இருப்பது இல்லை. அதோடு தொடக்கத்தில் இருந்தே இந்த தாழ்வு பகுதி நிலையற்று காணப்படுகிறது. கணிப்புகளை சமயங்களில் இந்த தாழ்வு பகுதி பொய்யாக்கி வருகிறது. இந்த நிலையற்ற தன்மை காரணமாக தற்போது மின்னல்களும் அதிகம் ஏற்பட தொடங்கி உள்ளன. மேகங்கள் நிலையற்று நகர்ந்து இருக்கின்றன.

மின்னல்கள்

மின்னல்கள்

இதன் காரணமாக மின்னல்கள் அதிக அளவில் ஏற்பட தொடங்கி உள்ளன. அதன்படியே சென்னையில் நேற்று இரவில் இருந்தே மின்னல்கள் அதிக அளவில் தாக்கின. இன்று அதிகாலை நேரத்திலும் மின்னல் வெட்டு அதிகமாக இருந்தது. அதன்பின் திருவள்ளூர் சென்னை சாலையில் சென்னைக்கு அருகே இன்று மிகப்பெரிய மின்னல் வெட்டு ஏற்பட்டது. 312 kA அளவில் மிகப்பெரிய மின்னல் வெட்டு ஏற்பட்டது.

சென்னை நிலை

சென்னை நிலை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட மின்னல் வெட்டுகளில் மிகப்பெரிய மின்னல் வெட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சென்னைக்கு அருகே இப்படி ஒரு மின்வெட்டு 312 kA அளவில் ஏற்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து மிக கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 8 மணி கடந்த பின்பும் கூட சென்னை இருட்டாக காணப்பட்டது. இப்போதும் கூட சென்னை அதிகாலை போல் இருட்டாக காணப்படுகிறது.

அதிகாலை

அதிகாலை

அதிகாலை 4 மணி போல சென்னை கும்மிருட்டாக இருந்தது. கடந்த வாரங்களில் மழை பெய்தாலும் காலை 8 மணியில் இருந்து மாலை வரை கொஞ்சம் வெப்பம் இருந்தது. அதன்பின் மீண்டும் மாலைக்கு பின் மழை பெய்தது. ஆனால் இன்று சென்னையில் அதிகாலையில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையில் சூறைக்காற்று தீவிரமாக வீசி வருகிறது. பல இடங்களில் காற்று அதிகம் இருப்பதால் மரங்கள் விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இன்றும் நாளையும் நிலவரம்

இன்றும் நாளையும் நிலவரம்

சென்னையில் இன்றும், நாளையும் விட்டு விட்டு மழை பெய்யும். முக்கியமாக இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் கனமழை பெய்யும். பிற்பகல் நேரத்தில் மழை பெரிதாக பெய்யும் வாய்ப்பு இல்லை. அதன்பின் திங்கள் கிழமை மாலையில் இருந்து மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பின்னர் ஒருவாரத்திற்கு பின் சென்னையில் மீண்டும் மழை வேகம் எடுக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு வெளியிட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+