பொங்கல் லீவு ஓவர்.. சென்னைக்கு படையெடுக்கும் வாகனங்கள்! விழிபிதுங்கும் விக்கிரவாண்டி! கடும் டிராபிக் ஜாம்
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. குறிப்பாக விக்கிரவாண்டி, பரனூர் டோல்கேட்டுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்தபடி செல்வதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இதேபோல் சிங்கபெருமாள் கோயில் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில், நெல்லை பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு
தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று மக்கள் கொண்டாட ஏதுவாக 14 ஆம் தேதியும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 13 ஆம் தேதியே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கின்றன. இதனால், சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று காலை முதலே சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். கார்களிலும் பேருந்துகளிலும் சென்னைக்கு வரும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சாரை சாரையாக அணி வகுத்து வருகின்றன.
கடும் போக்குவரத்து நெரிசல்
சாலையின் மறுபக்கத்தில் ஒரு சில வாகனங்களே செல்லகூடிய நிலையில், சென்னை மார்க்கத்தில் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டு இருக்கின்றன. சொந்த வாகனங்களில் சென்ற பயணிகள், நாளை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என திட்டமிட்டு முன்கூட்டியே தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
ஆனாலும் இன்று காலை முதலே சென்னை நோக்கி வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விக்கிரவாண்டி, பரனூர் டோல்கேட்டுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சில கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது. இதேபோன்று சிங்கபெருமாள் கோயில் அருகேயும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம்
இது ஒருபக்கம் என்றால் நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலான டிக்கெட்டுகளில் ரிசர்வேஷன் செய்யப்பட்டுவிட்டதால், பேருந்துகளில் இடம் கிடைக்காமல் பயணிகள் பரிதவிப்பதையும் காண முடிகிறது.
சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டாலும் அதுவுமே முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிட்டவர்கள் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுவதை பார்க்க முடிகிறது. அதேபோல, ரயில் நிலையங்களில் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நிற்க கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் இன்று காலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications