அமெரிக்கா கோரிக்கை.. சென்னையில் பாங்காக் நிறுவன ஹெலிகாப்டர் 'சிறை பிடிப்பு!' அமலாக்கத் துறை அதிரடி
சென்னை: அமலாக்க இயக்குனரகம் (ED) பாங்காக் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டரை சென்னையில் தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பரஸ்பர உதவி நடவடிக்கைகளை எடுக்க ஏற்கனவே அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதால், அமெரிக்க கோரிக்கையை ஏற்று சென்னையில் வைத்து பாங்காங் நிறுவன ஹெலிகாப்டர் மடக்கி நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றம் இந்த ஹெலிகாப்டரை பிடிக்க வாரண்ட் பிறப்பித்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சிறைபிடிப்பு
ஹமீத் இப்ராஹிம் மற்றும் பாங்காக்கின் மரிலாக் ஏவியோன் சர்வீசஸ் கோ லிமிடெட் அப்துல்லா ஆகியோருக்குச் சொந்தமான பெல் 214 ஹெலிகாப்டர், சென்னையில் உள்ள, "ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கு மண்டலத்தில் (FTWZ)" சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை
பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ், "ஜே மாடடீ வர்த்தகக் கிடங்கு மண்டலத்தில் (FTWZ)" இருந்து இந்த ஹெலிகாப்டரோ அல்லது அதன் உதிரி பாகங்களோ வெளியே போகக் கூடாது என்று அமலாக்க இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுத்துள்ளதால் அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றம்
"கொலம்பியாவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டை நிறைவேற்றும் பொருட்டு, அமெரிக்கா எழுப்பிய கோரிக்கையின் பேரில், ஹெலிகாப்டரை நிறுத்தி வைத்துள்ளோம். அமலாக்கத் துறை நடவடிக்கை அமெரிக்காவுடனான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் (MLAT) படி எடுக்கப்பட்டதாகவும்" என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்ட ஹெலிகாப்டர்
அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்ததும் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு பகுதிகளில் இந்த ஹெலிகாப்டர் தொடர்பான சோதனைகளை நடத்தி உள்ளது. அப்போதுதான் வர்த்தக கிடங்கு பகுதியில் ஹெலிகாப்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாதாந்திர வாடகை அடிப்படையில் இந்த ஹெலிகாப்டர் வாடகைக்கு விடப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. ஹெலிகாப்டர் முழு பறக்கும் நிலையில் இல்லாமல் பிரித்து பாகங்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. தேவைப்படும்போது அவற்றை ஒன்றாக சேர்த்துக் கொண்டு பறக்கும் நிலைக்கு கொண்டு வருவதற்கு அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உதிரிபாகங்கள் தனித்தனியாக பிரித்து தனித்தனி மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்தது விசாரணை அமைப்புகளை ஏமாற்றுவதற்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில், சமீபத்தில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தி பேமிலி மேன்-2 வெப்சீரிசிலும் ஹெலிகாப்டரை பிரித்து வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்பது நினைவிருக்கலாம்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications