சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லுக்கேமியா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள 2 வயது யாழினியின் சிகிச்சைக்கு உதவுங்கள்

சென்னை: அரியவகை கேன்சர் காரணமாக உயிருக்கு போராடும் 2 வயது குழந்தைக்கு வேகமாக உதவி செய்யுங்கள்.

என் பெயர் ரகு, நான் என் மகள் யாழினிக்காக உதவி கேட்டு வந்து இருக்கிறேன். துறுதுறுவென இருக்கும் என் இரண்டு வயது மகள் அவள். நாங்கள் கோவையில் வசித்து வருகிறோம். எங்கள் குடும்பம் அழகானது. ஆனால் திடீரென்று ஒருநாள் எங்களின் மொத்த சந்தோஷமும் நொறுங்கி போனது.

Help to save 2 year Yazhini from Acute lymphoblastic leukemia

எங்கள் சந்தோசம் அப்படி உடைந்து போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்தான் என் மகளுக்கு அரியவகை கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. Acute lymphoblastic leukemia (Philadelphia chromosome) என்ற கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அன்றே நாங்கள் உடைந்து போய்விட்டோம். தற்போது இவளுக்கு கொங்கு நாடு மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை அளித்து வருகிறோம். இதுவரை சிகிச்சைக்காக 4 லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறோம். எங்கள் சொத்து, சேமிப்பு அனைத்தையும் விற்று அவளுக்கு செலவு செய்து இருக்கிறோம்.

அவளுக்கு உடனே தொடர் சிகிச்சை செய்ய வேண்டும். இன்னும் 5 லட்சம் ரூபாய் அவளுக்கு சிகிச்சை செய்ய பணம் தேவை. அப்போதுதான் கூடுதலாக தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். அடுத்த மாதத்திற்குள் அவளுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். எங்களிடம் பணம் இல்லை என்று, யாழினியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Help to save 2 year Yazhini from Acute lymphoblastic leukemia

யாழினிக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். யாழினி உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் யாழினி உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X