போலீஸ் உன்னை கூப்பிட்டு கேப்பாங்க.. எதையும் சொல்லாதே.. நண்பரிடம் போனில் பேசிய ஹேமந்த்
சென்னை: சித்ரா மரணம் குறித்து போலீஸார் விசாரித்தால் எதையும் சொல்லிவிடாதே என நண்பரிடம் ஹேமந்த் கூறும் ஆடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் ஹேமந்த் தனது மகளை அடித்தே கொன்று விட்டார் என சித்ராவின் தாயார் பகீர் தகவலை வெளியிட்டார்.
இந்த நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கிட்டுதான் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது முகத்தில் இருப்பதும் அவரது நகக் கீறல் என்றும் தெரியவந்தது. எனினும் சித்ராவை சக நடிகருடன் தொடர்புபடுத்தி பேசி அவ்வப்போது சண்டையிட்டதே சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என சொல்லப்பட்டது.

ரோஹித்
இதன் பேரில் கணவர் ஹேமந்தை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமீன் கோரி சென்னை ஹைகோர்ட்டில் ஹேமந்த் விண்ணப்பித்திருந்தார். அப்போது அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என ஹேமந்துக்கும் சித்ராவுக்கும் பொதுவான நண்பர் ரோஹித் எதிர் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடைசி நேரத்தில்
மேலும் கடைசி நேரத்தில் அதாவது சித்ரா இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன என்பது குறித்து ஹேமந்த் தன்னிடம் விவரித்த ஆடியோவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். அந்த ஆடியோவில் சித்ரா தற்கொலைக்கு ஹேமந்தின் டார்ச்சரே காரணம் என தெளிவாகிறது.

இன்னொரு தவறு
மேலும் ஒரு தவறை மறைக்க இன்ணொரு தவறு என்பதை போல், சித்ராவுக்கும் தனக்கும் நடக்கும் சண்டைகளை போலீஸிடம் சொல்லாதே என நண்பரிடம் ஹேமந்த் சொல்லும் பதிவுகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமாதானம்
அந்த ஆடியோவில் ஹேமந்த் , ரோஹித்திடம் பேசுகையில் உன்னை கூப்பிட்டு போலீஸ் கேப்பாங்க, அவங்க எப்படி சண்டை போடுவாங்களா, எப்படினு நீ சொல்லிடு சார் சின்னதா ஏதாவது சண்டை ஆரம்பித்தாலும் உடனே கட்டி பிடித்துக் கொண்டு சமாதானம் ஆகிடுவாங்க. இருவரும் சந்தோஷமாகவே இருந்தாங்கனு தெளிவா சொல்லிடு என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications