Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சக நடிகர் குமரனை வைத்தே சதா சண்டை.. சித்ராவை ரத்தம் வரும் அளவுக்கு அடித்த ஹேமந்த்.. நண்பர் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குமரனை வைத்தே சித்ராவுக்கும் ஹேமந்திற்கும் இடையே சண்டை வரும் என்றும் அந்த சண்டையில் சித்ராவை ரத்தம் வரும் அளவுக்கு காட்டுமிராண்டி போல் ஹேமந்த் அடிப்பார் என்றும் அவரது நண்பர் ரோஹித் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோஹித் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் ஹேமந்துக்கும் சித்ராவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறும். அந்த சண்டையின் போது ஹேமந்த் சித்ராவை கடுமையாக தாக்கிவிடுவார்.

சித்ரா வளர்ந்து வரும் நடிகை, அந்த பெண்ணிடம் இத்தனை கொடூரமாக இருக்காதே என ஹேமந்துக்கு நான் அறிவுரைகளை வழங்குவேன். அந்த பொண்ணு உனக்கு மனைவியாக கிடைத்ததே ஒரு வரம் என அறிவுறுத்தியுள்ளேன்.

ஹேமந்த்

ஹேமந்த்

என் மனைவியும் ஹேமந்திற்கு அறிவுரைகளை வழங்குவார். ஆனால் அவரோ இதுவரை நாங்கள் சொன்ன அறிவுரைகளை காது கொடுத்து கேட்டதே இல்லை. எந்த சண்டை வந்தாலும் சித்ராவை ரத்தம் வரும் அளவுக்கு அடிப்பார். அந்த பெண்ணை படுக்கையில் தள்ளி சரமாரியாக அடிப்பார்.

வெறி பிடித்தவர்

வெறி பிடித்தவர்

ஒரு பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்கிவிடும் அளவுக்கு வெறிகொண்ட நபர் ஹேமந்த். எனக்கு 10 ஆண்டுகளாக ஹேமந்த் நண்பர். அவர் இதுவரை ஒரு பெண்ணுடன் இருந்து பார்த்ததில்லை. அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பிருக்கிறது.

குமரனை வைத்து சண்டை

குமரனை வைத்து சண்டை

கல்யாணம் செய்யும் அளவுக்கு சென்றது சித்துவுடன் மட்டும்தான். அந்த பெண் மிகவும் நல்லவர். மரியாதை தெரிந்தவர். சித்ராவுடன் நடித்த குமரனை வைத்தே இருவருக்கும் இடையே சண்டை முழுக்க முழுக்க நடைபெறும். லாக்டவுன் முடிந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு தொடங்கியது.

களங்கப்படுத்திய ஹேமந்த்

களங்கப்படுத்திய ஹேமந்த்

அந்த சீரியல் படப்பிடிப்பு முடியும் வரை காத்திருக்காமல் அங்கு போய் சண்டை போட போகிறேன் என்பார். அந்த பெண்ணுக்கு போன் செய்து நீ வெளியே வா, நடித்தது போதும், இல்லாவிட்டால் உள்ளே வந்து எல்லோர் முன்பும் உன்னை அடித்துவிடுவேன் என ஹேமந்த் டார்ச்சர் செய்வார். சித்ராவின் பெயரை களங்கப்படுத்துவது போல் ஹேமந்த் செயல்பட்டார்.

தனியார் தொலைகாட்சி

தனியார் தொலைகாட்சி

குமரனுடன் தனியார் தொலைகாட்சியில் சித்ரா டான்ஸ் ஆடியதால் அவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தினார். சித்ராவுக்கும் ஹேமந்திற்கும் பொது நண்பராக உள்ள என்னை இதுவரை போலீஸாரோ ஆர்டிஓவோ விசாரணைக்கு அழைக்கவில்லை.

ஜனவரி 21-க்கு வழக்கு ஒத்திவைப்பு

ஜனவரி 21-க்கு வழக்கு ஒத்திவைப்பு

இது ஏன் என தெரியவில்லை. எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இதனாலேயே என்னிடமும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை நான் நாடினேன் என்றார். இதனிடையே ஹேமந்தின் ஜாமீன் மனு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்ததும் அதற்கு பதில் அளிக்க போலீஸார் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணை ஜனவரி 21ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+