நள்ளிரவு 1.30 மணிக்கு ஹோட்டலுக்கு வந்த சின்னத்திரை நடிகை சித்ரா.. அந்த 15 நிமிடங்கள் நடந்தது என்ன?
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா இறப்பதற்கு முன்னர் நடந்தது என்ன என்பது குறித்து அவரது கணவர் ஹேமந்த் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பூந்தமல்லியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்கிறது. சித்ராவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து முதல்முறையாக ஹேமந்த் மனம் திறந்துள்ளார்.

சித்ரா மரணம்
சித்ராவின் மரணத்திற்கு அரசியல்வாதிகள், போதை மாஃபியா கும்பல் உள்ளிட்டோர்தான் காரணம் என்றும் சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களால் எனது உயிருக்கும் ஆபத்து என்றும் தனக்கு பாதுகாப்பு தேவை என்றும் ஹேமந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து ஹேமந்த் கூறுகையில் சித்ரா இறப்பதற்கு முதல் நாள் இரவு சூட்டிங் முடிந்தது.

நள்ளிரவு 1. 30 மணிக்கு
இதையடுத்து நள்ளிரவு 1.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு அவர் வந்திருந்தார். வரும்போதே அவர் மனம் நிறைய குழப்பங்களுடன் வந்தார். ஆனால் ஹோட்டலுக்கு வருவதற்கு முன்னர் என்னிடம் போனில் நன்றாக பேசினார். எனக்கு காதல் மெசேஜ்களை எல்லாம் அனுப்பியிருந்தார்.

பால்கனியில் யோசனை
இந்த நிலையில் ஹோட்டலுக்கு வந்த சித்ரா வழக்கத்திற்கு மாறாக இருந்தார். அந்த நடு இரவிலும் பால்கனியில் நின்று கொண்டு சாலையை பார்த்தபடி எதையோ யோசித்து கொண்டிருந்தார். நான் கூப்பிட்டு பார்த்தேன். அவர் வரவில்லை. எப்போதுமே நைட் சூட்டிங் சென்றால் குளிக்க செல்வது சித்ராவின் வழக்கம்.

15 நிமிடங்கள்
அன்றைய இரவும் சித்ரா குளிக்க சென்றுவிட்டார். நான் வெளியே உட்கார்ந்திருந்தேன். அப்போது 15 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர் வரவில்லை. இதனால் திடுக்கிட்ட நான் கதவை தட்டினேன். திறக்கவே இல்லை. முனகல் சப்தம் மட்டுமே இருந்தது. இதனால் அவர் அழுகிறார் என்றுதான் நான் நினைத்தேன். சரி அவரை சமானப்படுத்துவோம் என நினைத்துதான் உள்ளே போனேன்.

தூக்கில் தொங்கிய நிலை
ஆனால் அவரோ தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். எப்போதும் என்னிடம் விளையாடுவார். அது போல் நினைத்து, கயிற்றிலிருந்து அவரை இறக்கி முதல் உதவி கொடுத்தேன். ஆனால் அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை என ஹேமந்த் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications