நல்ல முகூர்த்த நாளில் கட்சி கொடியேற்றிய விஜய்! இத்தனை குற்றச்சாட்டுகளா? எப்படித்தான் சமாளிக்க போறாரோ
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நேற்று அறிமுகமான வெறும் 8 மணி நேரத்தில் விஜய் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன என்பது தெரியுமா? பட்டியல் போடும் அளவுக்கு லிஸ்ட் பெருசா இருக்கே!
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கு முறையான அனுமதி கிடைக்கப்படவில்லை என்ற தகவல்களும் வருகின்றன. இந்த நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி (நேற்று) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான கொடியையும் கொடி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
அந்த கட்சிக் கொடி சிவப்பு மஞ்சள் நிறத்தில் இரு பிளிறும் போர் யானைகள், நடுவில் வாகை மலர், 28 நட்சத்திரங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் விஜய்யின் கொடியில் யானை படம் இடம்பெற்றிருப்பதற்கு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது குறித்து காவல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நேற்று கட்சி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அதாவது குத்து மதிப்பாக 8 மணி நேரங்களில் பார்த்தோமேயானால் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஒரு தரப்பில் இருந்துதான் வந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
குற்றச்சாட்டு 1: விஜய் நேற்று தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொடி அறிமுக விழாவிற்கு வருகை தந்த கார், கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த காருக்கு ரூ 4,500 அபராதத் தொகை நிலுவையில் இருந்தது. இந்த கார் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட நிலையில் மொத்தம் ரூ 4700 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதில் கடைசியாக ரூ 200 மட்டுமே செலுத்திய நிலையில் மீதமுள்ள ரூ 4,500 அபராதம் நிலுவையில் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு விஜய் தனது காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததால் விதிமீறல் என கூறி ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு 2: உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை ஆகும். இந்த சின்னத்தையே விஜய்யும் பயன்படுத்தியதால் தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆனந்தன் சென்னை காவல் துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
குற்றச்சாட்டு 3: தவெக கட்சி கொடி அறிமுக விழாவுக்கு நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவும் தந்தை சந்திரசேகரும் வருகை தந்தனர். கட்சி கொடி ஏற்றி முடித்துவிட்டு கட்சி நிர்வாகிகளை விஜய் சந்தித்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஷோபா, புஸ்ஸி ஆனந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு சற்று திரும்பிய விஜய்க்கு வாழ்த்து சொல்ல அவரது கையை ஷோபா பிடித்த போது அதை கண்டுக் கொள்ளாமல் விஜய் நகர்ந்துவிட்டார். பத்திரிகையாளர்கள், கட்சி நிர்வாகிகள் இருந்த போது பெற்றத் தாயை இதுபோல் அலட்சியப்படுத்தியதாக விஜய் மீது விமர்சனங்கள் எழுந்தன.
குற்றச்சாட்டு 4: கட்சி கொடியில் உள்ள பூ வாகை மலர் என்றும் சங்க இலக்கியத்தில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அணிவிக்கும் பூ என்றும் தவெக நிர்வாகிகள் பெருமை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அது வாகை பூ இல்லை என்றும் விஜய் கட்சி கொடியில் இருப்பது தூங்கு மூஞ்சி வாகை என்றும் சொல்லப்படுகிறது.
குற்றச்சாட்டு 5: விஜய்யின் கட்சிக் கொடியில் அதுவும் தமிழகத்தில் உள்ள கொடியில் கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் யானை கொடி இருப்பதாகவும் ஸ்பெயின் நாட்டு கொடியின் நிறங்களான சிவப்பும் மஞ்சளும் இருப்பதாகவும் சென்னை சமூக ஆர்வலர் ஒருவர் புகார் செய்துள்ளார். விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications