தமிழகத்தில் அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு! விடுமுறை தள்ளி போகிறதா?
சென்னை: தமிழகத்தில் அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி புயலானது வடதமிழகத்தை ஒட்டி ஆந்திராவுக்கு செல்லவிருந்ததால் அன்றைய தினம் மேற்கண்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் 5 அடிக்கு மேல் தேங்கியுள்ளது.
இதனால் இன்று வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதாவது டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பலரது புத்தகங்களும் நோட்டுகளும் மழை வெள்ளத்தில் நனைந்து கந்தலாகிவிட்டது. சிலரது புத்தகங்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நாளை அரையாண்டு தேர்வை அந்த மாணவர்கள் எழுத முடியாத நிலை உள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நாளை தொடங்கவுள்ள அரையாண்டு தேர்வுகள் வரும் 13 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய தேர்வு அட்டவணை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 13 ஆம் தேதி தமிழ்
டிசம்பர் 14 ஆம் தேதி விருப்ப பாடம்
டிசம்பர் 15 ஆம் தேதி ஆங்கிலம்
டிசம்பர் 18 ஆம் தேதி கணிதம்
டிசம்பர் 20 ஆம் தேதி அறிவியல்
டிசம்பர் 21 ஆம் தேதி உடற்கல்வி
டிசம்பர் 22 ஆம் தேதி சமூக அறிவியல்
அது போல் 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் புதிய தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அந்த வகுப்புகளுக்கு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதால் அரையாண்டு தேர்வு விடுமுறையும் தள்ளி வைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டது போல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை தேர்வுகள் முடிந்து, டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications