இதுதான் கமல்ஹாசன்! இந்தியன் 3 ட்ரெய்லரில் 1806வது வருஷத்தை பற்றி சொன்னது ஏன் தெரியுமா?
சென்னை: 1806 ஆம் ஆண்டு முதல் தலைமுறை தலைமுறையாக ரத்தம் சிந்தியதுதான் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு காரணம் என இந்தியன் 3 டிரெயிலரில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். அப்படி 1806 ஆம் ஆண்டு ரத்தம் சிந்த வைத்த போர் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினம் வரும் வியாழக்கிழமை ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 3 டிரெய்லரில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட போர் குறித்து கமல் ஆவேசமாக பேசும் வசனங்கள் வைரலாகி வருகின்றன.

இந்தியன் 2 படத்தில் லஞ்சம், ஊழலில் திளைப்போரை இந்தியன் தாத்தா கொலை செய்கிறார். அவரை கைது செய்ய போலீஸார் அவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் நிலையில் அதன் தொடர்ச்சி இந்தியன் 3 யில் உள்ளது. அதில் கமல்ஹாசன் "உங்களுக்கெல்லாம் கார்கில் போரையும் சீன ஊடுருவலையும் மட்டுமே தெரியும்.
உங்கள் வீட்டு வாசலுக்கு வராத போர்களை பற்றி மட்டுமே தெரியும். ஆனால் 1806 ஆம் ஆண்டு நடந்த ஒரு போரில் தலைமுறை தலைமுறையாக சிந்திய ரத்தத்தால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என கூறுவார். அப்படி 1806ஆம் ஆண்டு என்ன போர் நடந்தது என்பதை பார்க்கலாம்.
வரலாறு படித்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட போர் வேலூர் புரட்சிதான். கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து சிப்பாய்கள் பெருந்திரளாக ஆங்கிலேயரை எதிர்த்த போர் இதுவாகும். ஆனால் இந்தியாவில் முதல் சுதந்திர போர் மீரட்டில் 1857 ஆம் ஆண்டு நடந்தது என பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் இருக்குமே தவிர, 51 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு வித்திட்ட 1806 ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சி குறித்து எந்த பதிவுகள் இல்லை.
இந்த புரட்சி எதனால் நடந்தது என்பதை பார்க்கலாம். அதாவது வேலூரில் ஜலகண்டேஸ்வரர் கோயில் இருக்கும் கோட்டையில் திப்பு சுல்தானின் வாரிசுகள் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டிருந்தனர். கோட்டையை ஆங்கிலேய சிப்பாய்களும் அவர்களுக்கு கட்டுப்பட்ட இந்திய சிப்பாய்களும் காவல் காத்தனர். அவர்களில் இந்துக்கள், முஸ்லீம்கள் என இருந்தனர்.
இந்த நிலையில் வெள்ளையர்களை போரில் ஓட ஓட விரட்டி மைசூர் அரியணையில் திப்பு சுல்தானின் வாரிசுகளை அமர்த்த இஸ்லாமியர்கள் திட்டமிட்டிருந்தனர். இது குறித்து கிராமங்களில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினர். அந்த சமயத்தில் சென்னை மாநில ஆங்கிலேய படை தளபதி ஜான் ரடாக், சிப்பாய்களுக்கு புதிய தொப்பிகளை அறிமுகப்படுத்தினார்.
ஆனால் அவை மாட்டுத் தோலால் செய்யப்பட்டது என இந்து சிப்பாய்களும் பன்றி தோலால் செய்யப்பட்டது என முஸ்லீம் சிப்பாய்களும் அணிவதற்கு மறுத்தனர். இந்த புதிய தொப்பியுடன் , ஜான் டராக் இந்தியர்களை கொந்தளிக்கும் வகையிலான உத்தரவையும் போட்டார். அதாவது சிப்பாய்கள் யாரும் நெற்றியில் விபூதி பூசுவதோ நாமம் போட்டுக் கொள்வதோ கூடாது. தாடி வளர்க்கவே கூடாது, மீசையையும் டிரிம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இது சிப்பாய்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர்கள் இந்திய சிப்பாய்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக இப்படி செய்கிறார்கள் என கருதினர். இதையடுத்து திப்பு சுல்தானின் மகன்கள் சிறையில் இருந்த நிலையில் அவர்களது உறவினர்களும் நண்பர்களும் அரச குடும்பத்தின் பணியாளர்களை போல் வேடமிட்டுக் கொண்டு புரட்சிக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
அந்த வகையில் 1806ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இரவு 2 மணிக்கு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்களான சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹூசைன் ஆகியோர் ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். அதில் சில அதிகாரிகள் மட்டும் தப்பினர்.
பிறகு இந்திய சிப்பாய்கள் கோட்டையை கைப்பற்றினர். கட்டாய தலைப்பாகையை அறிமுகப்படுத்திய கர்னல் மிக்ரிஸும் கொலை செய்யப்பட்டார். கோட்டையில் திப்பு சுல்தானின் புலிக் கொடி ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்து இளவரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பணியாளர்கள் கோட்டையில் இருந்த கஜானாவை கொள்ளை அடிக்க முயன்றனர்.
இந்த பிரச்சினையில் புரட்சியாளர்கள் கவனம் செலுத்தினர். அதற்குள் சென்னையிலிருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆங்கிலப் படைகள் வந்து வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றின. ஏராளமான புரட்சிக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புரட்சி படையினருட் அப்பாவிகளும் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்.
அன்று ஒருநாள் மட்டுமே 3000-க்கும் மேற்பட்டோரை ஆங்கிலேயர்கள் கொன்று குவித்தனர். மேலும் 600 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் கொடூர தண்டனைகளை பெற்றனர். இனி யாரும் புரட்சி, சுதந்திரம் போன்ற வார்த்தைகளையும் குரல்களையும் கேட்கவே கூடாது என கூறி இந்தியர்களை கொடுமைப்படுத்தினர். இப்படியாக 1806 ஆம் ஆண்டு நடந்த இந்த போர்தான் ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டு சுதந்திரம் பெற வித்திட்டது!
-
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications