Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெல்லிய தேகம்.. கால் விரல்கள் அகற்றம்.. அடையாளம் தெரியாத விஜயகாந்த்! கதறிய ரசிகர்கள்.. பிளாஷ்பேக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் காலில் 2 விரல்கள் அகற்றப்பட்ட சம்பவமும் கம்பீரமாக பார்த்து பழகிய நிலையில் மெலிந்த தேகத்துடன் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு வெளியான அவரது புகைப்படமும் ரசிகர்களை கடும் வேதனைக்குள்ளாகியது.

நடிகர் விஜயகாந்த்.. மதுரையை சேர்ந்தவர். குடியாத்தத்தில் பெண் எடுத்தவர். ஆம், இவரது மனைவி பிரேமலதா குடியாத்தத்தை சேர்ந்தவர். விஜயகாந்தின் தந்தை நல்ல பணக்காரர். ஆனாலும் தந்தையின் நிழலில் உட்கார விரும்பாத கேப்டன் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு சினிமாவில் நடிக்க முயற்சித்தார்.

இதற்காக வயிற்றில் பசியுடனும் கண்களில் சோர்வுடனும் மனதில் நம்பிக்கையுடனும் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினாராம் விஜயகாந்த். அப்போது சில நேரங்களில் உணவு இடைவேளை நேரத்தின் போது விஜயகாந்த் சென்றாலும் அவரை உட்கார வைத்தே மற்றவர்கள் சாப்பிடுவார்களாம். பேச்சுக்குக் கூட விஜயகாந்தை சாப்பிடுகிறாயா என கேட்க மாட்டார்களாம்.

தமிழ் சினிமா

தமிழ் சினிமா

ஒரு வழியாக 1979 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஈட்டி என்ற படத்தில் அறிமுகமானார் விஜயகாந்த். அப்போது சினிமாவில் ஜாம்பவான்களாக ரஜினி, கமல் இருந்த போதிலும் ஆக்ஷன் படங்களின் மூலம் ரசிகர்களை தன்னகத்தே உருவாக்கி கொண்டவர். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருந்தாலும் ஆரம்பத்தில் வாய்ப்பு தேடும் போது எப்படி இருந்தாரோ அதே போல்தான் விஜயகாந்த் புகழின் உச்சிக்கு சென்ற போதும்.

என்ன சாப்பாடு

என்ன சாப்பாடு

தனக்கு என்ன சாப்பாடு கொடுக்கிறார்களோ அதே சாப்பாடுதான் சாதாரண ஊழியர் முதல் நடிகர், நடிகைகள் வரை கொடுக்க வேண்டும் என விஜயகாந்த் கூறுவாராம். அது போல் தன் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அனைவருக்குமே கறி சாப்பாடுதானாம். தனது அலுவலகத்திற்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் அனுப்பவே மாட்டாராம்.

புதிய இயக்குநர்கள்

புதிய இயக்குநர்கள்

ஒவ்வொரு முறையும் புதிய புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர். தன்னால் எந்த தயாரிப்பாளராவது நஷ்டம் அடைந்துவிட்டார் என தெரிந்தால் போதும் அடுத்த படத்தை சம்பளமே இல்லாமல் நடித்து கொடுப்பாராம் இந்த தங்கமனசுக்காரர். நடிகர் சங்கத் தலைவராக இருந்து அந்த சங்கத்தின் கடனை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் அடைத்தவர். நடிகர் சங்கத்தில் எள் முனை அளவுக்கு கூட ஊழல் செய்யாதவர்.

நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

திரைத்துறை, நடிகர் சங்கம் என எல்லாவிதத்திலும் ஜொலித்த விஜயகாந்த் அரசியலுக்கும் வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கர்ஜனையான வசனங்களை பேசி மக்களை மகிழ்வித்த விஜயகாந்தால் தற்போது பேசக் கூட முடியவில்லை என்பது வேதனையான செய்தியாக உள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரசிகர்களையும் தேமுதிக தொண்டர்களையும் கண்டாலே குழந்தை போல் சிரிக்கும் விஜயகாந்திற்கு இன்னமும் உடல்நிலை குணமாகவில்லை. அரசியல் ரீதியாக விமர்சனங்களை விஜயகாந்த் மீது முன்வைத்தாலும் அவர் மீது தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஒரு விஷயம் கூட யாருக்குமே சிக்கவில்லை. அந்த அளவுக்கு நல்ல மனிதர். பொன்னம்பலம், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இவரை தெய்வமாகவே பார்க்கிறார்கள். விஜயகாந்த் இல்லாவிட்டால் நாங்கள் இல்லை என சொல்லும் அளவுக்கு நிறைய பேரை விஜயகாந்த் வாழ வைத்திருக்கிறார்.

ரத்த ஓட்டம்

ரத்த ஓட்டம்

உடல் தேகம் மெலிந்து முகம் எல்லாம் வாடி, அடையாளமே தெரியாத விஜயகாந்தின் ஒரு புகைப்படத்தை பார்த்து நளினி, ராதாரவி உள்ளிட்டோர் கதறி அழுதனர். இந்த தோற்றத்தில் விஜயகாந்த்தை பார்க்க முடியாது என அழுதனர். விஜயகாந்த்திற்கு காலில் ரத்த ஓட்டம் சரியில்லாத காரணத்தால் அவரது வலது காலில் 2 விரல்கள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் ரசிகர்களும் தொண்டர்களும் மட்டுமல்லாமல் கலைத்துறையினரும் பொதுமக்களும் நொறுங்கி போய்விட்டார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

சுதந்திர தின விழாவில் கொடியேற்றுவதற்கு கயிறை பிடித்துக் கூட இழுக்க முடியாமல் விஜயகாந்த் இருந்தார். மேலும் மூக்கு கண்ணாடியை கூட போட முடியாமல் தவித்தார். இப்படிப்பட்ட நிலையிலும் தனது ரசிகர்களையும் தொண்டர்களையும் பார்த்தே தீர வேண்டும் என விஜயகாந்த் விரும்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விஜய பிரபாகரன் பர்த்டே

விஜய பிரபாகரன் பர்த்டே

இது மட்டுமல்லாமல் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஒரு படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதில் விஜய பிரபாகரனுக்கு விஜயகாந்த் கேக் ஊட்டிய படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் உடல் மெலிந்து, கைகள் மெலிந்து முகமே வாடிய நிலையில் விஜயகாந்த் காட்சியளிக்கிறார். இத்தனை நல்லதுகளை செய்த விஜயகாந்தை இந்த கடவுள் சோதிப்பது ஏனோ என ரசிகர்கள் கலங்குகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+