ரியல் எஸ்டேட், வேலையின்மை, லஞ்சம், ஊழல்.. திமுகவின் அதிரடி பிரச்சார வீடியோ!
சென்னை: ரியல் எஸ்டேட், வேலையின்மை, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து 4 நிமிட காணொலி காட்சியை பிரச்சார வீடியோவாக வெளியிட்டது திமுக.
அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து 4 நிமிட காணொலி காட்சியை திமுக பிரச்சார வீடியோவாக வெளியிட்டது.
Recommended Video

அதில் வயலூரை சேர்ந்த மாணிக்க பேசுகிறேன், சினிமாவில் காண்பிப்பதை போல் எங்கள் கிராமமும் செல்வ செழிப்புடன்தான் இருந்தது. ஆனால் இன்றோ அப்படியில்லை. ஒரு காலத்தில் எங்கள் ஊர் நன்றாகத்தான் இருந்தது.

ரியல் எஸ்டேட்
சிறிய வயதில் நாங்கள் எல்லாம் எங்கள் கிராமத்து கன்மாயில் குளித்து நீச்சல் அடித்தோம். ஆனால் இப்போது அந்த கன்மாய் இருந்த சுவடே இல்லை. அங்கு ரியல் எஸ்டேட் போர்டு போட்டுள்ளார்கள். ஆடிப்பெருக்கு வந்தால் எங்கள் ஊரில் உள்ள ஆற்றிற்கு பூக்களை தூவி வணங்குவோம். ஆனால் அப்படிப்பட்ட ஆற்றில் இன்று சாயக்கழிவுகள் மிதக்கின்றன.

ஷூ காலுடன்
உழுத நிலத்தில் தெரியாமல் செருப்பு போட்டுக் கொண்டு போனாலே அம்மா வெளக்கு மாத்த எடுத்துக்கிட்டு எங்கம்மா துரத்துவாங்க. அப்படி குலச்சாமியாக பார்த்த நிலத்தை வேறு வழியில்லாமல் விற்றுவிட்டோம். இன்று எங்கள் நிலத்தில் ஷூ காலுடன் எவனோ ஒருத்தன் கட்டடம் கட்டிக் கொண்டு இருக்கிறான்.

மருத்துவர்
இது ஒரு பக்கம் இருக்க படித்து எப்படியாவது மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் பக்கத்து மாவட்டத்தில் ஒரு புள்ள இருந்தது. கிராமத்துல யாருக்கேனும் உடல்நலம் சரியில்லாவிட்டால் டவுனுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையை அந்த புள்ள மாத்த நெனச்சது. ஆனால் நீட் தேர்வால் அந்த புள்ளயின் கனவு நிறைவேறாமல் போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பேப்பரில் என்ன இருக்கு
அனிதா மட்டுமில்லை தமிழகத்தில் ஜோதி, சுபஸ்ரீனு அப்பாவி புள்ளைங்க இந்த பரீட்சையினால் உயிரை விட்டுட்டாங்க. இப்பலாம் பேப்பரை திறந்தாலே கொலை, கொள்ளை, பலாத்காரம்தான் வருது, பொண்டாட்டி, புள்ளைங்க வெளியே போகவே பயப்படறாங்க. எப்ப எவன் என்ன பண்ணுவான்னு பதற்றத்திலேயே திரிய வேண்டியதா இருக்கு. எங்கள் ஊரில் வண்டி வச்சிருக்கவங்க பெட்ரோல் போடவே பக்கத்து ஊருக்கு போகணும்.

10 ஆண்டுகள்
இதுல எங்கள் காட்டை அழித்துவிட்டு ரோடு போட்றாங்களாம். இப்படி ஒவ்வொன்றாக எங்ககிட்ட இருந்து பறிச்சிக்கிட்டே போனதால இந்த 10 வருஷத்துல தமிழகமே தலைகீழாகிவிட்டது. ஒரு பக்கம் எவனோ எங்க தண்ணீரை உறிஞ்சுறான். அரசாங்கமும் அதற்கு ஒப்புதல் கொடுக்கிறது. இன்னொரு பக்கம் 8 வழி சாலை என சொல்லி விவசாயிகளின் நிலத்தை அரசாங்கமே பிடுங்கி அழிக்கிறது.

அரசாங்கம்
லஞ்சம் அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு வர வேண்டிய தொழிற்சாலைகள் எல்லாம் ஆந்திரா, கர்நாடகாவுக்கு செல்கின்றன. இந்த அரசை எதிர்த்து போராடினா அரசாங்கமே சுட்டுக் கொல்லுது. பிள்ளைங்க ஆசைப்பட்டதை படிக்க முடியாத தற்கொலை பண்ணிக்கிருத வேடிக்கை பாக்குது. படித்த படிப்புக்கு வேலைவாய்ப்பை கூட அரசாங்கம் ஏற்படுத்தி தர மாட்டேங்கிது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் டெல்லியில் அம்மணமாக போராடினாலும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. ஒரு வேலை ஆகனும்னு அரசாங்க கதவை தட்டுனா, ஒரே கரெப்ஷன், கமிஷன், கலக்ஷன்ல மட்டும்தான் இந்த அரசாங்கம் குறியாக இருக்கே தவிர நம்ம மொழியை பத்தியோ பாரம்பரியத்தை பத்தியோ சுயமரியாதை பத்தியோ துளியும் கவலைப்பட மாட்டேங்கிது. நான் யோசிச்சி பார்த்தேன், இதுல எங்க தப்பு எதுவும் இருக்கானு.

ஓட்டு நமது உரிமை
ஒரே ஒரு தப்புதான் தப்பான ஆளுங்களுக்கு ஓட்டு போட்டதுதான். கடமைக்கு ஓட்டு போட்றவங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். ஓட்டு என்பது கடமை மட்டுமல்ல, அது நம் உரிமை. அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் மீதி இருக்கிற தமிழகமும் மிஞ்சாது. எங்க ஊரை பத்தியும் எங்க ஜனத்த பத்தியும் கவலைப்படாத இந்த அரசை நான் இனிமே நம்புறதா இல்லை என அந்த வீடியோவில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications