ஏய் ஏய்.. கம்முனு இரு.. நிருபர்லாம் இருக்காங்க! போலீசிடம் ஆக்ரோஷமாக கத்திய எடப்பாடி.. ஆளே மாறிட்டாரே
சென்னை: இன்று செய்தியாளர் சந்திப்பில் திடீரென எடப்பாடி பழனிசாமி போலீசாரிடம் கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசியல் உலகை இரண்டு முக்கியமான அறிக்கைகள் உலுக்கி உள்ளன. ஒன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை. இரண்டாவது தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை.
இதில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் சசிகலா மீது நேரடியாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. அருணா ஜெகதீசன் அறிக்கையில் அப்போதைய முதல்வர் எடப்பாடிக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

எடப்பாடி பழனிசாமி
இந்த அறிக்கைக்கு இடையில் இன்று அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் இந்த உண்ணாவிர போராட்டம் என்பது மேற்கண்ட அறிக்கைக்கு எதிரான போராட்டம் கிடையாது. மாறாக இது தமிழ்நாடு சட்டசபையில் இருக்கை மாற்றுவது தொடர்பான போராட்டம் ஆகும் இது. எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, அந்த பதவியில் ஆர்பி உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்தது.

உண்ணாவிரதம்
அவரின் இருக்கையை ஆர்பின் உதயகுமாருக்கு கொடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்தது. இதை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக அமளி ஏற்பட்டது. அவை தொடங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு அமளியில் ஈடுபட்டது. இவர்களுக்கு கேள்வி நேரத்திற்கு பின் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கேள்வி நேரத்திற்கு முன் பேசுவதற்கு அனுமதி வேண்டும் என்று கூறி எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

போராட்டம்
இதனால் அவையில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தது. இதை தொடர்ந்து இதே கோரிக்கையை முன் வைத்து இன்று எடப்பாடி ஆதரவு அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. முன் கூட்டியே போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பேரிகேட் போட்டு இருந்தனர். அதிமுகவினர் போராட்டம் செய்யும் முன்பே அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது
சாலையில் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் போலீசாருக்கும் எடப்பாடிக்கும் இடையில் கடுமையாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கைதுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் வரிசையாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது.

கோபம்
அதேபோல் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி அறிக்கை தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது திடீரென முன்னால் நின்ற நிர்வாகி ஒருவரை பார்த்து எடப்பாடி கடுமையாக கோபம் கொண்டார்.ஏய்.. ஏய்.. என்ன இது.. கம்முனு இரு.. கம்முனு இரு.. நிருபர்களாம் இருக்காங்க.. என்னங்கிற இப்போ என்று கடுமையாக கேள்வி கேட்டு கோபம் அடைந்தார். அங்கு இருந்த நிர்வாகி ஒருவரை பார்த்து எடப்பாடி இப்படி கோபம் அடைந்தார்.

மாறிட்டாரே!
பொதுவாக செய்தியாளர் சந்திப்பில் இப்படி எடப்பாடி கோபம் அடைந்ததே இல்லை. அவர் பொதுவாக செய்தியாளர் சந்திப்பில் தன்மையாக நடந்து கொள்வார். ஆனால் இன்று அவர் மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டார். எடப்படியா இப்படி.. ஆளே மாறிட்டாரே என்று அதிமுகவினர் கமெண்ட் அடிக்கும் அளவிற்கு அவர் இன்று கோபம் அடைந்தார். தொடர்ந்து வரும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவர் இப்படி ரியாக்ட் செய்து இருக்கலாம் என்றும் அதிமுகவினர் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications