அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றலைன்னா அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை.. ஐகோர்ட் உத்தரவு!
மதுரை: சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாலைகளில் பேனர், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் கடமை என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகளை அகற்ற உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில் "சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றுவது வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் கடமை. சட்டவிரோத பேனர்கள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும்.
அகற்றத் தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிடலாம் என கருதினோம். இருந்தபோதிலும் அதை தவிர்க்கிறோம்.
இந்த விவகாரத்தில் கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கையை உயர் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தனர்.
மேலும், சட்டவிரோதமாக அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகளை அகற்றிவிட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கண்ட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!










Click it and Unblock the Notifications