Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் போலீஸ் வழக்கறிஞர்கள் கூட்டு சேர்ந்து வீட்டை பறித்த விவகாரம்.. ஹைகோர்ட் கடுமையான உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்களை கூட்டணி சேர்த்துக் கொண்டு அடாவடியாக தனது வீட்டை உறவினர் கைப்பற்றிக் கொண்டதாக பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிவில் விவகாரத்தில் போலீசார் தலையிடக்கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவாகும்.. இடம், நிலம், வீடு, மனை சம்பந்தப்பட்ட உரிமையியல் பிரச்சனையில் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது. எடுக்கவும் கூடாது.. நீதிமன்றமே உரிமையியல் பிரச்சனையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதேநேரம் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் சிலரின் உதவியுடன் சிவில் பிரச்சனையில் கட்டப்பஞ்சாயத்து செய்வது நடக்கிறது. அப்படிப்பட்ட விஷயங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரும் போது, நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கிறது. இந்த விவகாரத்தில் போலீசாரை நீதிமன்றம் அவ்வப்போது எச்சரித்தும் வருகிறது..

High Court condemns it as tantamount to desecration of the sacred profession of lawyer

இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் பிரச்சனையில் போலீசார் தலையிட்டதாக வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், என் பெயர் ஜெயஸ்ரீ. என்னுடைய கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். நான் தண்டையார்பேட்டையில் வசித்து வரும் வீட்டின் உரிமை தொடர்பாக எனக்கும், எனது உறவினரான வதனி என்பவருக்கும் இடையே பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நான் குடியிருந்துவரும் வீட்டில் எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என கடந்த மார்ச் 12-ம்தேதி கீழமை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே எனது உறவினரான வதனி சில வழக்கறிஞர்களை அழைத்துக்கொண்டு தண்டையார்பேட்டை போலீஸாருடன் சேர்ந்து கொண்டு அடாவடியாக எனது வீட்டைக் கைப்பற்றிக் கொண்டார். எனவே சம்பந்தப்பட்ட போலீஸார் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.விஜேந்திரன், வீட்டை கையகப்படுத்தும்போது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்கள், போலீஸாரின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் , இதுபோன்ற சம்பவங்கள் இனி எதிர்காலத்தில் நடக்கக்கூடாது. வழக்கறிஞர்கள் கோர்டில் தான் பணியாற்ற வேண்டுமேயன்றி, இதுபோல தங்களது கட்சிக்காரர்களுடன் சென்று சொத்துகளை கையகப்படுத்தும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது.

வழக்கறிஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது புனிதமான வழக்கறிஞர் தொழிலை அசிங்கப்படுத்துவதற்கு சமம். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. எனவே இந்த வழக்கில் தொடர்புடைய தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று (மார்ச் 28) பிற்பகலில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+