சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விதிமீறல் கட்டிடங்களை இடிக்காத தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு ஹைகோர்ட் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை கோரிய வழக்கில் விதிமீறல் கட்டிடங்களை இடிக்காத தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ருக்மன்காதன் மனுதாக்கல் செய்திருந்தார்.

High Court condemns Tamil Nadu government and Chennai corporation for not demolishing illegal buildings

அந்த மனுவில்,தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி 5வது மண்டலமான ராயபுரத்தில் 5574 விதிமீறல் கட்டங்கள் கண்டறியபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் 1161 கட்டங்களை பொறுத்தவரை கட்டட பணிகளை நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,679 வீடுகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,115 கட்டிடங்களுக்கு சீல் வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மீதமுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும்,மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்த கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும் மனுவில் குற்றச்சாட்டு.

5வது மண்டலமான இராயபுரத்தில் மட்டும் 5574 விதிமீறல் கட்டிடங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ள போது சென்னை முழுவதும் 75ஆயிரம் முதல் 1லட்சம் வரை விதிமீறல் கட்டங்கள் இருக்கலாம் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே 5வது மண்டலத்தில் உள்ள 5574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்ட விரோத கட்டிடங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ளதாகவும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியய நீதிபதி இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாக துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

மேலும், சென்னையில் 5வது மண்டலத்தில் மட்டும் இவ்வளவு விதிமீறல்கள் என்றால், தமிழகம் முழுவதும் இதே நிலை தான் இருக்கும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசுத்துறை தலைவர்கள் கண்காணிக்கத் தவறிவிட்டதையே காட்டுகிறது. 2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் பாடம் கற்கவில்லை என நீதிபதிகள் குற்றச்சாட்டினர். மேலும் மனு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், 5 வது மண்டல உதவி ஆணையர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 22ற்கு தள்ளிவைத்தார்.

English summary
madras High Court condemns Tamil Nadu government and Chennai corporation for not demolishing illegal buildings in chennai. Chennai Corporation Commissioner, 5th Zonal Assistant Commissioner ordered to appear the court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X