Guru Peyarchi 2026: மீன ராசிக்கு யோகத்தை தரும் குருப்பெயர்ச்சி.. பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் மீன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சியான வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 25 ஆம் தேதியன்றும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். கடகம் என்பது சந்திரன் ஆட்சி பெற்ற வீடு. குரு அங்கு உச்சம் பெறுகிறார். உச்சம் பெறக்கூடிய குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் என்பது மிகவும் முக்கியம்.

குரு விஷேச பார்வையாக 5 ஆம் இடமான விருச்சிகத்தைப் பார்க்கிறார். சமசப்த பார்வையாக மகரத்தைப் பார்க்கிறார். 9 ஆம் பார்வையாக மீனத்தைப் பார்க்கிறார். விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பார்வை படுவதால் மிகுந்த பலம் பெறும். ஜனன காலத்தில் இந்த 3 ராசிகளுக்கும் நன்றாக இருந்தால் பலம் அதிகமாகும். கடகத்தில் இருக்கும் குரு மீன ராசியினருக்கு என்னவிதமான பலன்களை கொடுக்கப் போகிறார், தெய்வ வழிபாடு முறைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
மீன ராசி பலன்
மீன ராசியினருக்கு ஜென்மத்தில் சனி பகவான் இருக்கிறார். ராசியாதிபதியான குரு பகவான் 5 ஆம் இடத்தில் உச்சமாகி ராசியைப் பார்க்கிறார். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். குருப்பெயர்ச்சியில் விருச்சிகம், மகரம், மீனம் ராசியினருக்கு அற்புதமான யோகம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
பிள்ளைகளிம் சண்டை போடுவது, கோபப்படுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அசிடிட்டி, கர்ப்பப்பை கோளாறு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் பெரிய ஏற்றம் ஏற்படும்.
கவனம்
சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் வண்டி வாகனங்களை இயக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவது நல்லது. அதேபோல, அவர்களுடைய பழக்க வழக்கங்கள், கூடா நட்பு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவது, அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அனுகூலம்
தொழில் நன்றாக இருக்கும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் விஷயத்தில் மேன்மை ஏற்படும். பூர்வீகத்தில் அனுகூலம் காணப்படும். புதிய அறிமுகத்தில் கவனம் தேவை. பெரிய அந்நியோன்யம் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் ஏற்படும். தெய்வ மார்க்க திருப்பணிகளைச் செய்வது நல்லது. எல்லா விதத்திலும் ஏற்றமும், சந்தோஷமும், அனுகூலமும் காணப்படும்.
திருமண யோகம்
யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். உத்தியோகத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். பல விதத்தில் நன்மைகளும், சந்தோஷங்களும் ஏற்படும். திருமணம் செய்து கொள்ள ஏற்ற காலம். திருமணத்தை தள்ளிப் போடாமல் செய்து கொள்வது நன்மை. குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் புதிய வரவுகள் கிடைக்கும்.
வழிபாடு
வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த இழுபறியான விஷயங்கள், சிக்கல்கள் தீரும். லாட்டரியில் அதிர்ஷ்டம் ஏற்படும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் வழிபாடு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது சிறந்த பரிகாரமாகும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications