சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு போலீஸ் பாதுகாப்பு வேணுமா? பாஜக வெங்கடேஷ் மனுவை நிராகரித்த ஐகோர்ட்!
சென்னை: பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் போலீஸ் பாதுகாப்பு கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளிக்கெல்லாம் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் தொழிலதிபராக இருக்கிறார். இவர் மீது செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 59 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வெங்கடேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், "நான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். என்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு முத்துசரவணன் காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு தான்தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால், எனக்கு கொலை மிரட்டல் வருவதால், எனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வெங்கடேஷ் செம்மரக் கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்வது என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர், வெங்கடேஷ் சரித்திர பதிவேடு குற்றவாளி என அரசு வழக்கறிஞர் வாதங்களை வைத்தார்.
வெங்கடேஷ் மீது 10 குற்ற வழக்குகள், ஆந்திராவில் 49 வழக்குகள் உள்ளன. இவரது பெயரில் குற்றங்களுக்கான சரித்திர பதிவேடு உள்ளது. பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு முடியாது என கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெங்கடேஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதேபோல் குற்றவாளிகள் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த குற்றப் பின்னணியும் இல்லாமல் பாதுகாப்பு கேட்டிருந்தால், எந்த வித தயக்கமும் இன்றி பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பேன். சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications