மாசாணி அம்மன் கோயில் ரூ.100 கோடி நிதி விவகாரம்.. அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூபாய் 100 கோடி நிதியைப் பயன்படுத்த முடிவெடுப்பதற்கு முன்பு சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயில் தக்காராக ராஜ்குமார் என்பவரை நியமித்து அறநிலையத்துறை கடந்த ஜனவரி 14 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்தும் கோயில் நிரந்தர வைப்பு நிதியாக உள்ள ரூ. 100 கோடியை பயன்படுத்த தடை கோரியும் கூடுவாஞ்சேரி நந்திவரத்தைச் சேர்ந்த பி.பாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஜெகன்நாத், அறங்காவலர்களை நியமிப்பது தாமதமாகி வருகிறது. அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றாமல் கோயிலுக்குச் சொந்தமான நிரந்தர வைப்பு நிதி ரூ.100 கோடியை கையாளக் கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையும் நடந்து வருகிறது. வைப்பு நிதியை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஓராண்டாக இந்த கோயிலுக்கு அறங்காவலர்களை நியமிப்பதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பினர்.
பின்னர் அறங்காவலர்கள் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும், கோயில் நிரந்தர வைப்பு நிதியை பயன்படுத்தும் முன்பாக சட்ட விதிகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications