மறுகூட்டல் கட்டணத்தை ரீ-ஃபண்ட் செய்யக் கோரி வழக்கு.. விசாரணையின்போது ஐகோர்ட் நீதிபதி கேட்ட கேள்வி!
சென்னை: மறுகூட்டலின்போது மதிப்பெண் அதிகரித்தால் தேர்வு கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை.
மறுகூட்டலின்போது மதிப்பெண் அதிகரித்தால் தேர்வுக் கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த வளன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் போது எதிர்பார்த்ததை விட குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
அவ்வாறு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் பாடத்துக்கு ரூ.505 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. மறுகூட்டலின்போது மதிப்பெண் அதிகரிக்கும் பட்சத்தில் விண்ணப்பக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என கோரியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு வழங்கும் சேவையை பயன்படுத்திக் கொள்ள கட்டணத்தை செலுத்துவதில் என்ன தவறு? எனக் கேள்வி எழுப்பினார். அனைத்து மாணவர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள எண்ணினால் நிலைமை என்னவாகும்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
திருமங்கலத்தைச் சேர்ந்த வளன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், சிறுவர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் தானாகவே Switch Off ஆகும் வகையில் ஒரு செயலியை கண்டுபிடிப்பது தொடர்பாக வழக்கு தொடரலாமே? என நீதிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications