Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர்கள் மீதான 4 வழக்குகளையும் நானே விசாரிப்பேன்.. தேதி குறித்த ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்ய தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்க உள்ளார். 4 வழக்குகளின் விசாரணை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

High court judge anand venkatesh to hear the cases against minister from Feb 27

அதேபோல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இத்தகைய மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அனுமதி நீதிபதி ஆனந்த் வெங்கடெஷ் பெற்றுள்ளாரா? இல்லையா? என பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதியை பெறுவதற்கு முன்னதாகவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விசாரணையை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க முன் அனுமதி கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார்.

தலைமை நீதிபதி கடிதத்தைப் பார்க்கும் முன்னரே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமது விசாரணையையும் தொடங்கிவிட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதிக்கு எதிரான வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை விசாரிக்கும்படி, தலைமை நீதிபதி, தனக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த நான்கு வழக்குகள், பிப்ரவரி 27, 28, 29, மற்றும் மார்ச் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்தார்.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை பிப்ரவரி 12, 13ஆம் தேதியும், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு பிப்ரவரி 19 முதல் 22ஆம் தேதி வரையும் விசாரிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+