சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆவணங்களை ஒப்படைக்க... பொன்.மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை முதலில் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதே போல், பொன் மாணிக்கவேலின் பதவி காலம் கடந்த 30 தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தன்னுடைய பதவி காலத்தை நீட்டிக்க உத்தரவிட கோரி பொன்மாணிக்கவேல் மற்றும் டிராபிக் ராமசாமி ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளும் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை
அப்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி'யாக மீண்டும் பொன்.மாணிக்கவேலை மீண்டும் நியமிக்க கோரி தான் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என் யானை ராஜேந்திரன் முறையிட்டார்.

தமிழக அரசு
அப்போது, தமிழக அரசு தரப்பில்,சிலை கடத்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்ககூடாது என தெரிவித்தது.

மறுநியமனம்
மேலும், பொன்.மாணிக்கவேல் தன்னிச்சையாக செயல்பட்டார் எனவும், அரசுக்கு இதுவரை எந்த ஒத்துழைப்பும் தந்ததில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. ஏற்கனவே அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், அவரை மறு நியமனம் செய்ய முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

ஆவணங்களை ஒப்படைக்க
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு படி சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, பொன்.மாணிக்கவேல் தனது தரப்பு வாதங்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications