வேல்முருகன் மீதான வழக்கு ரத்து.. உளுந்தூர்பேட்டை டோல்கேட் உடைப்பு விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது, சுங்கச்சாடவடியை உடைக்க கட்சியினருக்கு உத்தரவிட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி சூறையாடப்பட்டது.

மத்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், அங்கு டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சுங்கச்சாவடியை தாக்கி சேதப்படுத்தும்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தூண்டியதாக, தவாக தலைவர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து இருந்தார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காந்திகுமார் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications