பூவை ஜெகன்மூர்த்தி மீதான கடத்தல் வழக்கு தள்ளுபடி! கடுமையாக வாதம் வைத்த போலீஸ்.. மனுதாரர் ட்விஸ்ட்!
சென்னை: காதல் விவகாரத்தில் இளைஞரின் சகோதரரான சிறுவனை கடத்தியதாக புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி ஜெயராமன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு விஜயஸ்ரீ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, பெண்ணை தேடி தனுஷ் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால், தனுஷின் சகோதரரை கடத்திச் சென்று, பின்னர் இரவு பேருந்து நிறுத்தம் ஒன்றில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தனுஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி, பெண்ணின் தந்தை வனராஜ் உள்ளிட்ட மூவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டு விட்டதாக மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், வழக்கை ரத்து செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கு தீவிரமான வழக்கு என்றும் வழக்கை ரத்து செய்தால், தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று வாதிட்டார்.
இது மக்கள் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், வழக்கை ரத்து செய்தால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதால் சமரசத்தை அனுமதிக்க முடியாது வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் வழக்கை விசாரித்து முடிக்க அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வழக்கு தொடர்ந்தவரே வழக்கை திரும்பப் பெற அனுமதி கேட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி ஜெயராமன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications