சென்னை உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்.. தலைமை பதிவாளர் எச்சரிக்கை
சென்னை: உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்களுக்கு வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறும் நபர்கள் நம்ப வேண்டாம் என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே உயர் நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் உள்பட பல்வேறு காலி பணியிடங்கள் இந்த ஆண்டு நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்காக உயர்நீதி மன்றம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
ஏராளமான காலிபணியிடங்கள் உள்ளதால் எப்படியாவது வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் .

எச்சரிக்கை
இந்த ஆர்வத்தை பயன்படுத்தி சில புரோக்கர்கள் அவர்களை தவறாக வழிநடத்தி பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை நம்ப வைத்து பணம் பறித்த சம்பவங்களும் நடந்துள்ளது.

ஏமாற வேண்டாம்
இந்நிலையில் தகுதியும் திறமையும் இருந்தால் மட்டுமே வேலை கிடைக்கும், எனவே யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மோசடி நபர்கள்
அதில் பதிவாளர் கூறியுள்ளதாவது: " சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு, புதுவை கிழமை நீதிமன்றங்களில் சில பணியிடங்களுக்கு நேரடி பணி நியமனங்களாக என அறிவித்துள்ளதாகவும், இதை பயன்படுத்தி வேலைக்காக காத்திருக்கும் நபர்களிடம் சில மோசடி நபர்கள் பணியிடங்களை பெற்று தருவதாக கூறி மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.

சிபிசிஐடி குற்றப்பிரிவு
மேலும் இத்தகைய மோசடி நபர்களை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் நேரடி பணி நியமனங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்.
நீதிமன்றத்தில் பணி வாங்கி தருவதாக கூறும் நபர்கள் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள சி
பிசிஐடி குற்றப்பிரிவு காவல்துறை இயக்குனரிடம் புகார் அளிக்கலாம் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications