Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாமே போலி.. ஹைகோர்ட் தீர்ப்பு பின்னடைவு இல்லை.. அலட்டிக்காத ஓபிஎஸ்.. நெக்ஸ்ட் மூவ் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இது பின்னடைவு இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவும் வழிவகைகளை உள்ளது என்றும் வழக்கறிஞர் திருமாறன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதன் தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியும் பதவியை மீண்டும் கொண்டு வருவது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பன்னீர்செல்வம் ,மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி. டி. பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை மட்டும் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

High Court verdict is not retroactive We will appeal in Supreme Court Says OPS lawyer

இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது ஏழு நாட்கள் நடைபெற்ற வாதம் கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது. ஜூன் 28ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் நிலைக்கத்தக்கதல்ல வழக்கில் தடை விதிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பினை கேட்ட உடனே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.

தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், தனி நீதிபதி முன்பு ஏற்கனவே நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், மற்றும் புதிதாக தாக்கல் செய்யப்படும் அசல் வழக்குகள், அதில் தங்கள் வாதங்களையும் ஆவணங்களையும் தாக்கல் செய்து பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக பரிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன் அடிப்படையில் நாங்கள் தனி நீதிபதியை அணுகி 6 மனுக்களைத் தாக்கல் செய்தோம். அந்த மனுக்களில் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொண்டது அதிமுக விதிகளுக்கு எதிரானது. இயற்கைக்கு எதிரானது என்ற அடிப்படையில், தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்தோம். அந்த வழக்கு தாக்கல் செய்து அதன் இடையீட்டு மனுவாக ஒரு இடைக்கால தடை கோரியிருந்தோம். குறிப்பாக சிறப்பு தீர்மானங்களுக்கு எதிராக இடைக்கால மனு கோரியிருந்தோம். அந்த மனு தனி நீதிபதி அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்த தீர்ப்பினை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நாங்கள் மேல்முறையீடு செய்தோம். நீதிபதிகள் முன்பு விரிவான வாதங்களை முன் வைத்தோம். வாதங்களை கேட்டதற்கு பிறகு நீதியரசர் அவர்கள், ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், எங்களின் இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அசல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த தீர்ப்பு எங்களுக்கு நிச்சயமாக பின்னடைவு கிடையாது.

அசல் வழக்குகளில் நாங்கள் எடுத்து வைத்த வாதங்களையும் அதற்கு ஈடாக நாங்கள் தாக்கல் செய்த ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். பொதுக்குழு எவ்வாறு கூட்டப்பட்டது? தீர்மானங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது எவ்வாறு போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது? போலியாக கையெழுத்து போட்டு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் என்பது குறித்து சாட்சியங்களை சமர்பித்து நாங்கள் அசல் வழக்கை தொடர்ந்து நடத்துவோம்.

இந்த இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவும் வழிவகைகள் உள்ளது என்றும் வழக்கறிஞர் திருமாறன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+