அசரடித்த ஸ்டாலின்.. கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு காலையிலேயே பறந்த உத்தரவு.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழக மக்களிடம் காவல்துறை எந்நேரமும் நெருங்கியே இருக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்களின் குறைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் தங்களது குறைகளையோ, அல்லது புகார்களையோ போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகளை சந்தித்து மனுக்களாக தந்து வருவது வழக்கமாகும்.

விசாரணை: எனினும், தங்கள் புகார்கள் மீது சரியான விசாரணை செய்யப்படுவதில்லை என்ற குறை பொதுமக்களுக்கு இருந்து வருகிறது.. மேலும், பல வழக்குகள் சரியாக விசாரணை செய்யப்படாமலேயே உள்ளது.. அத்துடன், மனுக்கள் நிராகரிப்பு செய்யப்படுவதாகவும் பொதுமக்களின் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன..
அதுவும் இல்லாமல், பெயரளவில் காவல் நிலையங்களில் ஒரு நாள் பொதுமக்களை காவல்துறை உயரதிகாரிகள் சந்திக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது..
அரசாணை: இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறியும்வண்ணம், தமிழக அரசின் சார்பில் முக்கிய அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. டிஜிபி சைலேந்திரபாபு முயற்சியின் காரணமாக, வாரத்தில் புதன்கிழமை ஆணையரகங்கள் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட கமிஷனர் மற்றும் எஸ் பி நேரடியாக பொதுமக்களை சந்திக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது..
இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்கவும் வழக்கின் விவரங்களை கூறவும் முடியும். இதற்கு முன்பாக வரை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அல்லது அவருக்கு மேலுள்ள அதிகாரியை பொதுமக்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருந்து வந்தது இந்த நிலையில் தான் இது தமிழக அரசு காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக பொதுமக்களை சந்திக்க வேண்டும் என்று தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது
உத்தரவு: பொது மக்கள் காவல் உயர்அதிகாரிகளை மிக எளிதில் அணுகும் விதத்திலும், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் விதத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புதன்கிழமைதோறும் பொது மக்களை சந்திக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்தாலும்கூட, தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது, காவல்துறையை பொதுமக்களிடம் மேலும் நெருங்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications