கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் 3ஆம் இடம்..ஜார்கண்ட், சத்தீஸ்கரில் வேக்சின்கள் அதிகம் வீண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தடுப்பூசிகளை ஜார்கண்ட், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகம் வீணடிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், தேவைக்குப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி இல்லாத காரணத்தினால் தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் 18-44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி பணிகளை நிறுத்தியுள்ளன.

தடுப்பூசியை வீணாக்கும் மாநிலங்கள்

தடுப்பூசியை வீணாக்கும் மாநிலங்கள்

இந்நிலையில், நாட்டில் தடுப்பூசிகள் வீணாவது குறித்து மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி வீணாகும் விகிதம் 6.3%ஆக உள்ளது. அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தில் 37.3% தடுப்பூசிகள் வீணாக்கப்படுகின்றன. அதேபோல சத்தீஸ்கரில் 30.2% தடுப்பூசிகள் வீணாக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 15.5% வீண்

தமிழகத்தில் 15.5% வீண்

தடுப்பூசிகளை வீணாக்குவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சராசரியாக 15.5% தடுப்பூசிகள் வீணாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல காஷ்மீரில் (10.8%), மத்தியப் பிரதேசத்தில் (10.7%) தடுப்பூசிகள் வீணாக்கப்படுவதாகச் சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகளவில் தடுப்பூசிகள் வீணாக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஒதுக்கீடு

தடுப்பூசி ஒதுக்கீடு

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவொரு தடுப்பூசி செலுத்தும் இயக்கத்திலும், தடுப்பூசிகள் வீணாவதைத் தவிர்க்க முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள் தொகை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன. தடுப்பூசி ஒதுக்கீட்டில் நாங்கள் வீணாக்கப்படுவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டே ஒதுக்குகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் முதலமைச்சர் மறுப்பு

ஜார்கண்ட் முதலமைச்சர் மறுப்பு

இதற்கு ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உடனடியாக பதில் அளித்துள்ளார். தடுப்பூசிகளை வீணாவதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அதேநேரம், ஜார்கண்ட் மாநிலத்தில் வெறும் 4.65 சதவீதம் மட்டுமே வீணாவதாக அவர் குறிப்பிட்டார். கோ-வின் தளத்திலுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தடுப்பூசிகள் குறித்த தரவுகளை அப்டேட் செய்ய முடிவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+