குறுக்கே இந்த கெளசிக் வந்தா? ஒட்டுமொத்தமாய் ஆட்டத்தைக் கலைத்த விஜய்! தீவிர யோசனையில் திராவிட தலைகள்!
சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த முறை பதிவான அதிக வாக்குப்பதிவு அரசியல் கட்சிகளிடையே பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக 85 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவானது, யாருக்கு சாதகமாக அமையும் என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்ட் வருகிறது. இதனால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களது தரப்பில் பல கணக்குகளை போட்டு, அடுத்து என்ன செய்யலாம்? என தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இந்த முறை கடந்த தேர்தலை விட சுமார் 5 சதவீதம் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால், அப்போது வாக்குப்பதிவு அளவு குறைவாக இருந்தது.

தமிழக சட்டசபை தேர்தல்
ஆனால் இந்த முறை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத சூழலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இதனால் இந்த கூடுதல் வாக்குகள் எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக தரப்பில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிக வாக்குப்பதிவு
அந்த ஆலோசனையில், கடந்த தேர்தலை விட வெறும் 5 சதவீதம் மட்டுமே கூடுதல் வாக்குகள் பதிவாகியிருப்பதால், இது எதிர்க்கட்சிகள் கூறுவது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றதாலும், புதிய வாக்காளர்கள் அதிகமாக இணைக்கப்பட்டதாலும் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களத்தில் இறங்கியிருப்பதும் வாக்குப்பதிவு அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான அதிமுக தரப்பிலும் இதே விவகாரம் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்த சில சமூக வாக்குகள் இந்த முறை தவெகவுக்கு மாறியிருக்கலாம் என்ற கணிப்பு அங்கு முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக போடும் கணக்கு
குறிப்பாக நகரப் பகுதிகளில் அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளதையும், இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் அதிமுக தரப்பு முக்கியமாக கவனத்தில் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரப் பகுதிகளில் வாக்குகள் இரட்டை இலக்கத்தில் பிரிந்தால், அதன் பயன் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் அங்கு விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தவெக தாக்கம்
இதே நேரத்தில், தவெக அல்லாத, சசிகலா-ராமதாஸ், தவாக கூட்டணி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் வருகை இந்த தேர்தலில் லேசான தாக்கத்தை ஏற்படுத்தும் என பலரும் கருதுகின்றனர். குறிப்பாக இளம் வாக்காளர்களை அதிகமாக ஈர்த்ததாக கூறப்படும் தமிழக வெற்றிக் கழகம் பாரம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கணிப்பும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
85 சதவீத வாக்குப்பதிவு
மொத்தத்தில் பார்க்கும்போது, இந்த முறை பதிவான 85 சதவீத வாக்குப்பதிவு தேர்தல் முடிவுகளில் முக்கிய திருப்புமுனையாக அமையுமா? என்ற கேள்வி இன்னும் பதில் இல்லாமல் தான் உள்ளது. இரு பெரிய கட்சிகளும் தங்களது தரப்பில் கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வெற்றி வாய்ப்புகளை கணக்கிட்டு வருகிற நிலையில், இறுதி முடிவுகள் வெளியாகும் மே 4ஆம் தேதி வரை இந்த குழப்பம் அதிமுக - திமுக வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்படும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.














Click it and Unblock the Notifications