10புதிய அரசு கலைக்கல்லூரிகள், ஆராய்ச்சி பாடப்பிரிவுகள்: உயர் கல்வித்துறையின் 25 அசத்தல் அறிவிப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 10 புதிய அரசுக் கலைக்கல்லூரிகள் கட்டப்படும், மாணவர்களின் நலன் கருதி அறிவியல் கல்லூரிகளில் புதிதாக ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என மொத்தம் 25 புதிய அறிவிப்புகளை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

உயர் கல்வித்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கு 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி கீழ்க்காணும் இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும். விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோயிலூர், ஈரோடு மாவட்டம் - தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானுர், திருப்பூர் மாவட்டம் - தாராபுரம், தருமபுரி மாவட்டம் - ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் - ஆலங்குடி மற்றும் வேலூர் மாவட்டம் - சேர்க்காடு ஆகிய இடங்களில் புதிய இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும்.

 மின்னணு நூலகங்கள்

மின்னணு நூலகங்கள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 17 மின்னணு நூலகங்களை மேம்படுத்துதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்ட 17 மின்னணு நூலகங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் உள்ளன. இந்நூலகங்களை மேம்படுத்தவும் உரிமங்களைப் புதுப்பிக்கும் ஒரு கல்லூரிக்கு 5 லட்ச ரூபாய் வீதம் 15 கல்லூரிகளுக்கு 85 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களை எல்லையற்ற அறிவு சார் வளங்களையும் உடனுக்குடன் எளிதாகப் பெறுவதற்கு மின்னணு நூலகங்கள் பாலமாக அமைந்து உள்ளன. எனவே சென்னை - வியாசர்பாடி தர்மபுரி பரமக்குடி, அரியலூர், முசிறி, விழுப்புரம், சிவகங்கை, கும்பகோணம், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மின்னணு ஊடகங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

 புதிதாக ஆராய்ச்சி பாடப் பிரிவுகள்

புதிதாக ஆராய்ச்சி பாடப் பிரிவுகள்

அண்மையில் தொடங்கப்பட்ட 13 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தற்காலிக கட்டடங்களில் இயங்கி வருகின்றன. முதற்கட்டமாக சங்கரன்கோவில், ஜம்புகுலம், வானூர் மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரு கல்லூரிக்கு ரூபாய் 1.33 கோடி வீதம் மொத்தம் 40 5.32 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் நலன் கருதி முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்வதற்குச் செங்கல்பட்டு, சேலம், கோயமுத்தூர், நாமக்கல், திருச்சி திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை - நந்தனம் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் தொடங்கப்படும்

 தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள்

தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள்

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஒருங்கிணைந்து வெவ்வேறு பாடப்பிரிவுகளில் 100 பாடப்புத்தகங்கள் ரூபாய் 2 கோடி செலவில் மொழிபெயர்க்கப்படும். தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பட்டயப் படிப்பில் பயிற்று மொழியாக ஆங்கிலம் மட்டுமே இதுவரை இருந்து வருகிறது. முதற்கட்டமாக அடுத்த கல்வியாண்டில் அமைப்பியல் (civil engineering) மற்றும் இயந்திர மற்றும் இயந்திரவியல் (mechanical engineering) பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும். படிப்படியாக இதர பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும்.

பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் (polytechnic College) தற்சமயம் மாணவிகள் சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது. மகளிரின் செயற்கை மற்றும் வேலை வாய்ப்பை உயர்த்துவதற்கு அக வனப்பியல் (Interlor Decoration), அலுவலக மேலாண்மை மற்றும் கணினிப் பயன்பாடுகள் (Office Management and Computer Applications), இணையவலை வடிவமைப்பு (Web Designing), இயந்திரவிய கணினி கொண்டு I வடிவமைத்தல் (CAD), உயிர் மருத்துவ மின்னணுவியல் (Blo-Medical Electronics) மற்றும் இதயத் துடிப்பு பதிவி (ECG) தொழில்நுட்பம் ஆகிய ஆறு பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.

 அயல்நாடுகளில் ஆராய்ச்சி பயிற்சி

அயல்நாடுகளில் ஆராய்ச்சி பயிற்சி

நமது மாணாக்கர்கள் அயல்நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்பினை அதிகளவில் பெறுவதற்காக, அயல்நாட்டு மொழிகளைக் கற்றல் கூடுதல் நன்மை பயக்கும் என்பதால், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு ஜெர்மானிய, ஜப்பானிய, சீன. ரஷ்ய, பிரஞ்சு ஆகிய அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படும். மாநில போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலையினைக் கருத்தில் கொண்டு. அக்கழகத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஈரோடு. சாலை மற்றும் போக்குவரத்துப் பொறியியல் கல்லூரி (Institute of Road and Transport Technology. Erode) இக்கல்வியாண்டு முதல் அரசுப் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டு மாணாக்கர் சேர்க்கையில் 35% இடங்கள் மாநிலப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கென தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

பொறியியல் பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பினை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பயிலவும், வேலை வாய்ப்பினைப் பெறும் எண்ணிக்கையை உயர்த்தவும், போட்டித் தேர்வுகளான IES, GATE, CAT, GMAT, GRE, IELTS, TOEFL போன்றவற்றுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், மாணவர்களைத் தொழில் முனைவோர்களாக ஊக்குவிப்பதற்கும். உரியப் பயிற்சிகளைப் பெறுவதற்கும். தொழில்முனைவு மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் உதவியுடன், ஐந்து மண்டலங்களில் பயிற்சி மையம் நிறுவப்படும். இம்மையங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் மேற்கூறிய பயிற்சிகள் வழங்கப்படும்.

 கூடுதல் பாடங்கள்

கூடுதல் பாடங்கள்

மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்துவதற்காகக் கூடுதல் பாடங்கள் (add on courses) பயிற்றுவிக்கத் தொழில்நுட்ப கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்கங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித் திறன்களை மேம்படுத்த 5 மண்டலங்களில் செய்கலைஞர் ஆய்வுக் கூடம் (Fab Lab / Makers Space) நிறுவப்படும். பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகளான, வணிகவியல் பயிற்சி பட்டயப் படிப்பு (Diploma in Commercial Practice). வணிகவியல் பயிற்சி மற்றும் கணினிப் பயன்பாடுகள் பட்டயப் படிப்பு (Diploma in Commercial and Computer Practice) பயின்ற மாணாக்கர்கள், தமிழகத்தின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், நேரடியாக இரண்டாம் ஆண்டில் பி.காம். படிப்பில் சேர்ந்து பயில வழிவகை செய்யப்படும்.

 புதிய ஒப்பந்தங்கள்

புதிய ஒப்பந்தங்கள்

மும்பை, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (IIT-Bombay) இணைந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் நிகழ்நிலை பாடங்கள் 51 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும். தேசிய உயர்கல்வித் திட்டம் (RUSA) நிதி உதவியுடன், தமிழகத்தில் உள்ள 150 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில் முனைவு குறித்து நிகழ்நிலை பயிலரங்கங்கள் நடத்தப்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில்சார் திறன் பயிற்சி ரூ.3.30 கோடி செலவில் அளிக்கப்படும்.

 தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தற்போது 8 மண்டல மையங்கள் வழியாகக் கல்விச் சேவை வழங்கி வருகிறது. மேலும், கூடுதலாக 4 புதிய மண்டல மையங்கள் ரூ.1 கோடி செலவில் சேலம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அமைக்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில், கற்போர் நலனுக்காகவும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையிலும் 32 மாவட்ட மைய நூலகங்களுக்கு தலா 750 பாடநூல்கள். ரூபாய் ஒரு கோடி செலவில் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை பெற்று முதுநிலைப் பட்டப் படிப்பு பயிலும் 600 மாணாக்கர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.6000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டு முதல் இம்மாணாக்கர்கள் எண்ணிக்கை 1200 ஆக அதிகரிக்கப்படும்.

 புதிய விடுதிகள்

புதிய விடுதிகள்

தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆவணங்களிலிருந்து உருவாக்கப்பட்ட 31,000 நுண் படச்சுருள்களை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கும் பொருட்டு, இயற்கையிலேயே குளிர்ந்த தட்பவெப்ப நிலையுள்ள நீலகிரி மாவட்டத்தில், 5000 சதுர அடி பரப்பில் நுண்படச்சுருள் பாதுகாப்புப் பெட்டகம் உருவாக்கப்படும். கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் 660 மாணவ, மாணவியர் இளநிலை மற்றும் முதுநிலை பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இம்மாணவிகள் நலன் கருதி ரூ.14.00 கோடி செலவில் புதிய இம்மாணவிகள் விடுதி கட்டப்படும். மதுரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் 800 மாணாக்கர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இம்மாணவர்களின் நலன் கருதி ரூ.15.00 கோடி செலவில் புதிய மாணவர் விடுதி கட்டப்படும்.

 பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்படும்

பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்படும்

நவீன தேவைகளுக்கேற்ப பாடத்திட்டங்களைச் சீரமைப்பது கல்வி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. மாணாக்கர்களின் அறிவு. திறன். கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்தவும், தொழிற்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+