தமிழக வருவாய் கடும் சரிவு- வரி பங்கீட்டை குறைத்த மத்திய அரசு- நிதி நிலைமை வெள்ளை அறிக்கை-முழு விவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2013-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது; வரி பங்கீட்டை மத்திய அரசும் வெகுவாக குறைத்துவிட்டது என தமிழக நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சென்னையில் வெளியிட்டார். இந்த நிதிநிலை அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:
- 2006-13 காலகட்டத்தில் 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசு வருவாய் உபரியை அடைந்திருந்தது.
- 2013-ம் ஆண்டு முதல் வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து இருக்கிறது.
- 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ61,320 கோடி. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.216%

- 2017-18; 2018-19 ஆகிய 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை முறையே 1.5% ஆகவும் 1.4% ஆகவும் இருந்தது.
- 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 92,305 கோடி ரூபாய். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4.43%
- 2016-21 ஆம் ஆண்டு காலத்தில் நிதிப் பற்றாக்குறையில் வருவாய்ப் பற்றாக்குறையின் விகிதம் 52.48%. இது 2011-16 கால கட்டத்தில் 14.94% ஆக இருந்தது.

- தமிழகத்தில் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை- நிதி அளிக்கும் பொறுப்புகள் ஒத்திவைக்கப்பட்டு பற்றாக்குறைகள் மறைக்கப்பட்டன.
- நிதிப் பற்றாக்குறையில் ஒரு கணிசமான பங்கு வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக பயன்படுத்துவதால் தற்போதைய நிதிப் பற்றாக்குறை அளவுகள் நிலையற்ற தன்மையுடன் உள்ளது.
- 2012-13 ஆம் ஆண்டு முதல் மாநில அரசின் ஒட்டுமொத்த கடன் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 14 வது நிதிக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% எட்டியுள்ளது.

- இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் வெளிச்சந்தையில் தற்போது அதிக அளவில் கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு நிற்கிறது.
- தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ2,63,976 கோடி பொதுக்கடன் சுமத்தப்படுகிறது.
- 2021-22-ல் இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பிட்டீன்படி ஒட்டுமொத்த கடன் ரூ5,70,189 கோடியாக இருக்கும்.
- மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பொதுக்கடன் விகிதம் 26.69%.
- 2006-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பொது கடனின் விகிதம் 18.37%

- மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநில்த்தின் சொந்த வரி வருவாயின் விகிதம் குறைந்து வருகிறது. 2017-18-ல் 6.40% ஆகவும் 2019-20ல் வரிவருவாய் விகிதம் 5.82% ஆகவும் 2020-21ல் இது 5.46% ஆகவும் மிக குறைந்த நிலையை எட்டியுள்ளது. இது பெருங்கவலை அளிப்பதாக உள்ளது.
- மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ60,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- தேசிய அளவுக்கும் மேலாக நிலைத்து நின்ற மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் ஒட்டுமொத்த வரி விகிதம் 2018-19-ல் முதல் முறையாக தேசிய சராசரி அளவுக்கும் கீழே போனது.

- 2020-21-ல் வணிக வரி விகிதம் 4.19% ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் மின்சார வரிவிகிதங்கள் குறைவாக உள்ளன
வெள்ளை அறிக்கை முழு விவரம்
http://www.tnbudget.tn.gov.in/tnweb_files/white_paper_2021_english.pdf
http://www.tnbudget.tn.gov.in/tnweb_files/white_paper_2021_tamil.pdf
More From
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications