ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்கு சந்தையில் நீண்டகால பிரச்சனை வராது- நிபுணர் உறுதி: Oneindia Exclusive
சென்னை: அதானி குழுமம் மட்டுமின்றி செபி தலைவர் மீதும் ஹிண்டன்பர்க் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனால் பங்கு சந்தை சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் ஹிண்டன்பர்க் அறிக்கை நம் நாட்டின் பங்கு சந்தையில் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது பற்றி பொருளாதார நிபுணர் ஹரிஹரன் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்து எளிமையாக விளக்கி உள்ளார்.
கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதானி குழுமம் முறைகேடு செய்து லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டது. இதில் அதானி குழுமத்தின் பங்குகள் சில நாட்கள் சரிந்த நிலையில் அதன்பிறகு உயர தொடங்கின.

இந்த குற்றச்சாட்டில் அதானி குழுமம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்பாது ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், செபி (SEBI) எனும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணைய தலைவர் மாதபி புச்-க்கு பங்குகள் இருக்கிறது.
அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று செபி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அதானி குழும பங்கில் செபி தலைவர் முதலீடு செய்ததால் தான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அதானி முறைகேட்டுக்கும், செபி தலைவர் மாதபி புச்-க்கும் தொடர்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த குற்றச்சாட்டை செபி முற்றிலுமாக மறுத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பங்கு சந்தையில் சரியலாம் என கூறப்படுகிறது. வழக்கமாக பங்கு சந்தை நிலவரம் சரியில்லாத நிலையில் இல்லை. இந்நிலையில் தான் இந்த சரிவு அச்சத்தை ஏற்படுத்த உள்ளது. இந்நிலையில் தான் ஒன் இந்தியா தமிழ் சார்பில் பொருளாதார நிபுணர் ஹரிஹரனிடம் நேரடியாக கருத்துகள் கேட்கப்பட்டது. ‛‛ஹிண்டன்பர்க் அறிக்கை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த முறை அதனை நாம் பார்த்தோம். தற்போது திரும்பவும் ஒரு முறை அதானி மட்டுமல்ல, ‛செபி'யின் தலைவர் மீதும் குற்றம் சுமத்தி உள்ளனர். இது எந்த வகையான பிரச்சனை? தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று நினைக்கிறீர்கள்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பொருளாதார நிபுணர் ஹரிஹரன் அளித்த பதிலில், ‛‛இந்த மாதிரி மோசமான செய்தி வெளிவந்தால் அது மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்த தான் செய்யும். ஏற்கனவே மார்க்கெட் என்பது பலவீனமாக உள்ளது.
மார்க்கெட் என்பது தற்போது டெக்னிக்கலாக வீக்காக உள்ளது. Fundamental- ஆக ஸ்ட்ராங்க்காக உள்ளது. இத்தகைய சூழலில் இதுபோன்ற மோசமான செய்தி வந்தால் மார்க்கெட் என்பது இன்னும் விழுவதற்கான வாய்ப்பு என்பது அதிகம். இந்த அறிக்கை என்பது கடந்த முறை வந்தபோது பங்கு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒன்று முதல் 2 நாட்கள் பெரும் சரிவை கண்டது. இந்த முறையும் அதுபோன்ற எதிர்பார்ப்பு என்பது இருக்கிறது. ஆனால் அதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து, ‛‛கடந்த முறை அதானி மீது மட்டும் தான் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனால் ஒன்று முதல் 2 நாட்கள் மார்க்கெட் வீழ்ந்தது. தற்போது செபி மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நம்பகத்தன்மையை கேள்வி கேட்டுள்ளதால் அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஹரிஹரன், ‛‛மார்க்கெட் விழ வாய்ப்புள்ளது. ஏனென்றால் செபி என்பது கேப்பிட்டல் ஆப் மார்க்கெட். அதன் தலைவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் அதனை மறுத்துள்ளார். மேலும் சில கம்பெனிகள் மீதான அறிக்கை வந்துள்ளது. இதனால் ரிப்போர்ட்டில் உள்ள கம்பெனிகளின் பங்குகள் விழ வாய்ப்புகள் இருக்கிறது. இது 2 நாட்களில் தெரிந்து விடும். ஃஎப்ஐஏ விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் உள்நாட்டு பங்கு வர்த்தகர்கள் அதிகம் வாங்குகின்றனர். இதனால் உள்நாட்டில் உள்ளவர்கள் மூலம் சரிசெய்ய முடியும். இதில் சில்லறை முதலீட்டாளர்கள் பயப்பட தேவையில்லை'' என்றார்.
மேலும், ‛‛உங்களின் கருத்துப்படி பார்த்தால் மார்க்கெட்டில் இது நீண்ட கால தாக்கமாக இல்லாமல், கறுகிய கால பிரச்சனையாக தான் இருக்குமா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஹரிஹரன், ‛‛அதுக்கான வாய்ப்புகள் தான் உள்ளது. ஆனால் இதன் உள்ளார்ந்த தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. விரிவான அறிக்கை வர வேண்டும். அதன் உண்மை தன்மை தெரிய வேண்டும். தற்போது வந்திருப்பது இன்பர்மேஷன். இன்பர்மேஷன் எப்போதுமே மார்க்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான் மார்க்கெட் என்பது சென்சிட்டிவ் என்று சொல்வார்கள்.
ஒரு ‛பேட் நியூஸ்' வந்தால் அதற்கு உடனடியாக ரியாக்சன்ஸ் இருக்கும். சரியா, தவறா என்பது அதன்பிறகு தான் தெரியும். இதற்கு 6 மாதம் ஆகலாம். ஓராண்டு ஆகலாம். உடனடியாக மார்க்கெட்டில் சறுக்கல் இருக்கும். ஃஎப்ஐஏ-வை கடந்த வாரம் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்ந்து விற்பனையாகும்போது மார்க்கெட்டில் சப்போர்ட் என்பது இருக்காது. அதேபோல் உள்நாட்டு பங்குதாரர்களும் இந்த ரிப்போர்ட்டை அடிப்படையில் விற்பனை செய்தால் மார்க்கெட்டில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்னொன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்கெட் தற்போது 24 ஆயிரத்தை தொட்டுள்ளது. 18 ஆயிரம், 17 ஆயிரத்தில் வாங்கியவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். இதனால் அவர்கள் கூடுதலாக வாங்கலாம். அப்படி பார்த்தால் மார்க்கெட் நிலவரம் என்பது சரியாக வாய்ப்புகள் தான் ஜாஸ்தி. இது குறுகிய கால சரிவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications