இந்தி ஒழிக, திராவிடம் ஒழிக என்பது எங்கள் கோட்பாடு அல்ல.. சீமான் பரபர பேச்சு!
சென்னை: இந்தி ஒழிக, திராவிடம் ஒழிக என்பது எங்கள் கோட்பாடு அல்ல என நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "இந்தி ஒழிக என்பதை விட, தமிழ் வாழ்க என சொல்ல வேண்டும். திராவிடம் ஒழிக என்பது எங்கள் கோட்பாடு அல்ல. தமிழ்த்தேசியம் எழுக என்பதே எங்கள் கோட்பாடு" எனப் பேசியுள்ளார்.

சீமான் பேசுகையில், "நான் கட்சியில் இருக்கிறேன், மகிழ்ச்சி. என்னால் எத்தனை பேர் கட்சியில் இருக்கிறார்கள் என்பதுதான் வளர்ச்சி. ஒரு வாக்குச்சாவடிக்கு 8 - 10 உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இனி அதை நீங்கள் செய்து தான் ஆகவேண்டும். அவரவர் தங்கள் வாழ்விடத்தை நாம் தமிழர் கட்சியின் கோட்டையாக மாற்றுங்கள். இந்த கோட்டையைத் தொடுவது எளிது. நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்தி ஒழிக என்பதை விட, தமிழ் வாழ்க என சொல்ல வேண்டும். இன்னொருவரின் தாய் மொழியை அழிப்பது என் வேலையல்ல. என் தாய்மொழியை காப்பதே என் கடமை.
திராவிடம் ஒழிக எங்கள் கோட்பாடு அல்ல. தமிழ்த் தேசியம் எழுக; வெல்க என்பதுவே என் கோட்பாடு. மற்றவன் தோற்க வேண்டும் என்று பணி செய்யாதே; நாம் எப்படி ஜெயிக்கவேண்டும் என்பதை நினைத்து பணி செய்யவேண்டும். அதுதான் நம் கோட்பாடாக இருக்க வேண்டும். மண்ணை வெல்வதற்கு முன், மக்களின் மனதை வெல்ல வேண்டும்.
நாம் மழை வெள்ளத்தில் களப்பணியாற்றியபோது நம்மைப் பற்றிய செய்திகள் வரவில்லை என பலர் வருந்தினர். நம் விளம்பரத்திற்காக வேலை செய்யவில்லை. விரும்பி வேலை செய்கிறோம். இது நம் கடமை. அதன் வழியில், செயல்படவேண்டும். தாயன்பைத் தாண்டிய பேரன்புடன் செயல்படும் தகுதி உள்ளவன் எவனோ, அவனே நாம் தமிழர் கட்சியின் முதன்மைத் தளபதியாக வலம் வரமுடியும். புரட்சியாளர்கள் எல்லோரும் ஒரே தத்துவத்தின் கீழ் பணி செய்தவர்கள் தான்.
நம்மை சிலர் பயமுறுத்துவார்கள். கூட்டணி வைக்காதபோது நம்மை விமர்சித்தவர்கள், இப்போது பாராட்டுகிறார்கள். அதற்கான நல்ல முடிவு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தெரியும். தோற்று தோற்று வென்றவனின் மனது இரும்பினும் கடினமாய் இருக்கும். என் அன்பு உடன்பிறந்தாரே உங்கள் மனது இரும்பினும் கடினமானதாய் இருக்கவேண்டும். நாம் வெல்வோம். நம்பிக்கையோடு இருப்போம்.
உங்கள் அப்பா முதலமைச்சரா? இல்லை. சாதி, மதத்தைச் சொன்னீர்களா? இல்லை. நீ உன் இனத்தின் கல்லறையில் பிறந்தவன். நீ உன் இனத்தின் ஒப்பாரியில் வளர்ந்தவன். உன்னையும் என்னையும் இறுகப்பிணைத்து வைத்திருப்பது தமிழும் நம் தலைவர் பிரபாகரனும்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என ஆக்ரோஷமாகப் பேசினார் சீமான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications