ஹிந்தியில் கிளாஸா?.. கேள்வி கேட்ட ஒரே நாளில் இந்தி திணிப்பை முறியடித்த சு.வெங்கடேசன் எம்பி!
: இந்தி திணிப்பு முறியடிப்புக்கு வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்
சென்னை: ஆங்கிலத்திலும் ரயில்வே மருத்துவமனை தகவல் அமைப்பு பயிற்சியை நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று அதற்கான அட்டவணை வெளியிட்டுள்ளதற்காக, ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.. அத்துடன், ரயில்வே பயிற்சி வகுப்புகளில் தாய்மொழி வழி பயிற்சியை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் வெங்கடேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி திணிப்புக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் எப்போதுமே உறுதுணையாக இருந்து வருபவர் எம்பி வெங்கடேசன்.. தமிழக உரிமை மற்றும் நலன்களுக்கு, மத்திய அரசால் ஒரு பிரச்சனை, ஆபத்து என்றால் முதல் ஆளாக நின்று கண்டித்து அதற்குரிய மாற்று நடவடிக்கையை வலியுறுத்துவர் வெங்கடேசன்.
அப்படித்தான் நேற்றைய தினம் மத்திய அரசுக்கு ஒரு பிரச்சனையை எழுப்பியிருந்தார்.. அதுசம்பந்தமாக, ரயில்வே அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

மருத்துவமனை
"அதில் ரயில்வே மருத்துவமனைகளில் புதிய நிர்வாக தகவல் அமைப்பு முறை அமல்படுத்துவதற்காக, அதன்மீது மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த பயிற்சி, அக்டோபர் 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை இணையவழி நடைபெறுகிறது. இதில் பயிற்று மொழியாக இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் தவிக்கிறார்கள்.

இந்தி
எனவே, இந்த பயிற்சியை இந்தியில் மட்டும் நடத்துவதை கண்டிக்கிறேன். அதனை தமிழிலும் அதைப்போன்று இந்தி இல்லாத மொழிகளிலும் நடத்த வேண்டும். அதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை என்றால் குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் தனியாக இணையவழி வகுப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

மருத்துவமனை
வெங்கடேசனின் இந்த கோரிக்கை உடனடியாக பரிசீலிக்கப்பட்டுள்ளது.. அதன்படி ஆங்கிலத்திலும் ரயில்வே மருத்துவமனை தகவல் அமைப்பு பயிற்சியை நடத்த வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று அதற்கான அட்டவணையையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.. ஒரே நாளில் தன் வேண்டுகோளை பரிசீலித்த ரயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அதுகுறித்து ஒரு அறிக்கையையும் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

இணையவழி பயிற்சிகள்
"ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்த இணையவழி பயிற்சிகள் இந்தியில் மட்டும் நடத்த அறிவிக்கப்பட்டு கடந்த இருபத்தி ஒன்றாம் தேதியில் இருந்து நடைபெற்று வந்தது. இதை விமர்சித்து இந்தி பேசாத மாநில ஊழியர்கள் வசதிக்காக அவரவர் தாய்மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இணையவழி பயிற்சி தனியாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். அதுவரை இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இப்பயிற்சிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை வைத்தேன்.

அட்டவணை
எனது கோரிக்கையை ஏற்று இப்போது 25 ஆம் தேதியில் இருந்து ஆங்கிலத்திலும் பயிற்சி அளிக்க ரயில்வே நிர்வாகம் அட்டவணையை வெளியிட்டுள்ளது.. அதன் நகல் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. 21 ஆம் தேதி முதல் இந்தியில் நடந்த பாடத்தை 25ம் தேதி ஆங்கிலத்தில் நடத்திட திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நவம்பர் இரண்டாம் தேதி வரை பயிற்சி அளிக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
அதன்படி காலையில் இந்தி பேசுபவர்களுக்கு இந்தியிலும், மாலையில் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும் வகுப்பு நடைபெறும். இது இந்தி பேசாத மாநில ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்தப் பிரச்சினையை என் கவனத்திற்கு கொண்டு வந்த ரயில்வே மருத்துவ ஊழியர்களையும், டி ஆர் இ யூ (DREU) தொழிற்சங்கத் தோழர்களையும் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் பயிற்சிகளை அவரவர் தாய் மொழியிலும் நடத்த வேண்டும் என்கிற என் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications