உளவு பார்த்தது உண்மைதான்.. பாகிஸ்தான் "ஸ்பை".. உளறிக்கொட்டிய ஜோதி மல்ஹோத்ரா.. என்ன நடந்தது?
டெல்லி: ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பின் உளவாளிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் உளவு வேலைகளை பார்த்தவர்களுடன் ஜோதி தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டு உள்ளார்.
கைது செய்யப்பட்ட யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானின் உளவு அசெட்டாகவே மாறும் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது உளவு பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த உளவாளி உறுதியான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கினால் அவர் உளவு அசெட்டாக மாறுவார்.
அதாவது உளவு பார்க்கும் நாட்டின் சொத்து. அவருக்கான செலவுகள், தேவைகளை அந்த நாடு பார்த்துக்கொள்ளும். அதோடு அந்த உளவாளி கண்டுபிடிக்கப்படும் நிலை இருந்தால் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு நாட்டிற்கு நாடு கடத்தும். சொந்த நாட்டிற்கே கூட அந்த உளவாளியை அழைத்துக்கொள்ளும்.
இப்படி இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உளவு பார்த்த பாகிஸ்தான் குடிமகன்கள்.. இப்போது இந்தியா கொண்டு வரப்பட்டு இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளனர். அப்படித்தான் பாகிஸ்தானின் உளவு அசெட்டாகவே ஜோதி மாறியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் உளவாளிகளுடன் இவர் தீவிரமாக நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் ஜோதியிடம் நேரடியாக உறுதியான பாதுகாப்பு துறை தகவல்கள் எதுவும் இல்லை. அவரால் அந்த உளவு தகவல்களை சேகரிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
செல்பி காரணம்
காஷ்மீரில் இருக்கும் காசிகுண்ட் பகுதியில் இவர் செல்பி எடுத்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது அந்த பகுதியில் இவர் செல்பி எடுத்ததே.. இவர் மீது சந்தேகம் எழுவதற்கு முதல் காரணம் ஆகும். 'காஷ்மீருக்கான நுழைவாயில்' என்று அடிக்கடி அழைக்கப்படும் காசிகுண்ட், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிர் பஞ்சால் மலைத்தொடரைக் கடந்த பிறகு இந்த பகுதி அமைந்துள்ளது. இந்திய ராணுவத்தின் முக்கியமான தளவாட முனையமாகும் இது.
கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் போதும், ஆபரேஷன் சிந்தூரின் போதும் அதிகம் பதற்றம் காணப்பட்ட இடங்களில் காசிகுண்ட் ஒன்றாகும். இந்திய ராணுவத்தின் முக்கியமான தளவாட முனையமாக இது உள்ளதால் பாகிஸ்தானின் உளவு அமைப்புகளின் கண்காணிப்பில் இந்த அமைப்பு தொடர்ந்து உள்ளது.
ரஷ்ய S-400 மற்றும் S-125 பெச்சோரா போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு அருகிலேயேதான் இருக்கின்றன. இந்த காசிகுண்ட் பகுதிக்கு உளவு செய்வதற்காகவே ஜோதி இங்கே சென்றதாக கூறப்படுகிறது. இங்கே இவர் எடுத்த செல்பி போர் சமயத்தில் டிரெண்டானது. இந்திய ராணுவத்திற்கு இந்த செல்பி பல சந்தேங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இவரை கண்காணித்து வந்த உள்துறை, இவரின் செல்பியை வைத்து அவர் உளவு பார்த்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளனர். இவர் இரண்டு முறை அடுத்தடுத்து காஷ்மீர் சென்றதும், காசிகுண்ட் பகுதியில் புகைப்படம் எடுத்ததும் அவர் மீதான சந்தேகத்தை உறுதி செய்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பின் உளவாளிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் உளவு வேலைகளை பார்த்தவர்களுடன் ஜோதி தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டு உள்ளார்.
உளவு பணிகள்
'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா எனப்படும் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த இவர்.. இந்திய இராணுவத் தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதற்காக ஹரியானாவின் ஹிசாரில் இவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 'டிராவல் வித் ஜோ மற்றும் 'nomadic Leo girl wanderer' என்ற பெயரில் யூடியூப் சேனல்களை நடத்தி வந்த 33 வயதான அந்த பெண் பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை அனுப்பி உள்ளார்.
பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள எஹ்சான்-உர்-ரஹீம் என்ற அதிகாரியுடன் பல உளவுத்தகவல்களை இவர் பகிர்ந்து உள்ளார். முக்கியமாக ஜோதி ராணி இரண்டு முறை பாகிஸ்தானுக்கு நேரடியாக விசிட் அடித்ததாகவும் கூறப்படுகிறது. பயண வீடியோ போடுகிறேன் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டு அங்கே பாகிஸ்தான் அரசு அதிகாரிகளை சந்தித்து உள்ளார்.
சமீபத்தில்தான் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் நாடு கடத்தப்பட்டார். தூதரக நடவடிக்கை அல்லாத வேறு செயல்களில் அந்த அதிகாரி ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அந்த அதிகாரி யார் பெயர் அவர் வகித்து வந்த பொறுப்பு உள்ளிட்ட விவரங்கள் அப்போது வெளியாகவில்லை. இந்தியாவின் உத்தரவில் அந்த பாகிஸ்தான் அதிகாரி இந்தியாவால் Persona Non Grata என அறிவிக்கப்பட்டு, 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் நாடு கடத்தப்பட்ட அந்த பாகிஸ்தான் அதிகாரி பாகிஸ்தான் உயர் கமிஷனில் வேலை பார்த்த எஹ்சான்-உர்-ரஹீம் என்று தெரிய வந்துள்ளது.
இவர்தான் தூதரக அதிகாரி என்ற பெயரில்.. இந்தியாவிற்குள் உளவு பார்த்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால்தான் ஜோதி மல்ஹோத்ரா எனப்படும் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த அதிகாரி வழியாக.. பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை இவர் வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications