தனி தொகுதிகளில் இந்து மத பட்டியலினத்தோர் மட்டும் போட்டியிடணும்! அர்ஜுன் சம்பத் வழக்கு இன்று விசாரணை
சென்னை: தமிழகத்தில் உள்ள தனி தொகுதிகளில் இந்து, சீக்கியம், பவுத்தம் தவிர்த்துப் பிற மத பட்டியலினத்தவர்கள் போட்டியிடத் தடை கோரி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வருகிறது. இதில் முன்வைக்கப்படும் வாதம் மற்றும் நீதிபதிகள் கருத்துகள் முக்கியமானதாக இருக்கும்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23ம் தேதி மாநிலம் முழுக்க உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மாநிலம் முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்றோடு வேட்புமனுக்கள் தாக்கல் காலமும் நிறைவடைந்த சூழலில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது.

வழக்கு
இதற்கிடையே பட்டியலின வேட்பாளர்கள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம், பவுத்தம் தவிர்த்த பிற மத பட்டியலினத்தவர்கள் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வேட்பாளர்கள் கிறிஸ்துவ மதத்தையே சார்ந்து இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தமிழ்நாடு
நமது நாட்டில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் தரும் வகையில், தேர்தலில் அந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் உள்ள சூழலில், அதில் 46 தனித் தொகுதிகள் ஆகும். அதில் 44 தாழ்த்தப்பட்டோர் பிரிவினருக்கும், 2 பழங்குடியினர் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் குறிப்பிட்ட இந்த பிரிவினரைத் தாண்டி மற்ற பிரிவினர்கள் போட்டியிட முடியாது.
இந்தச் சூழலில் தான் இதுபோல உள்ள தனி தொகுதிகளில் இந்து, சீக்கியம், பவுத்தம் தவிர்த்துப் பிற மத பட்டியலினத்தவர்கள் போட்டியிடத் தடை கோரி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என நேற்று முறையிட்டனர். அதைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் உறுதியளித்தனர்.
மனு
தமிழகத்தில் உள்ள பட்டியலினத்தவருக்கான தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90% கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அர்ஜுன் சம்பத் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று மதத்தினர் இதுபோல பட்டியலினத்தவருக்கான தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications