தப்பு தப்பு.. பெருங்குற்றம் புரிந்த 2 திமுக அமைச்சர்கள்.. ஹைகோர்ட்டுக்கு ஓடும் தலைவர்.. யார் பாருங்க
சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டில், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றதற்கு கண்டனம் தெரிவித்து, இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கபோவதாகவும், அறிவித்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு, விஸ்வரூபம் எடுத்து வருகிறது... "சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்... எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.. எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்" என்று உதயநிதி பேசியிருப்பது தலைநகரை அசைத்து பார்க்க வைத்து வருகிறது.

மத்திய அமைச்சர்: அதனால்தான், மத்திய அமைச்சர் அமித்ஷாவே உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் நிலைக்கு சென்றுள்ளார்.. மற்றொருபக்கம் உதயநிதி மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. போலீஸ்வரை புகார் சென்றாலும், உதயநிதி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.. இந்த உறுதிப்பாட்டை, மீண்டும் ஒருமுறை நேற்றைய தினம் அழுத்தமாக பதிவிட்டும் இருந்தார்.
அறிக்கை: இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,"சென்னை காமராஜர் அரங்கில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் இணைந்து, மாநாடு மற்றும் கருத்தரங்கத்தை நடத்தியது. தமிழக அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு இருவரும், இதில் பங்கேற்று பேசியுள்ளனர்.
இது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், 2 பேரின் அமைச்சர் பதவியையும், தமிழக முதல்வர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இது போன்ற மாநாட்டிற்கும், கருத்தரங்கத்திற்கும் போலீசார் அனுமதி வழங்கியதே தவறு. இந்து மதத்தை ஒழிப்போம் என்று சொல்லி, தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றது மனவேதனை அளிக்கிறது.
சனாதன தர்மம்: பெரும்பான்மையான இந்து மக்களின் ஓட்டுக்களை பெற்று, ஆட்சியில் அமர்ந்து கொண்டு, இந்துக்களை ஒழிப்போம், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய இவர்களின் செயல், இந்துக்களை வெறுப்பதாக உள்ளது. பெரும்பான்மையான இந்து மக்களின் மனதை புண்படுத்தும் செயலாக உள்ளது.. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலும்கூட.. பெருங்குற்றம்.
எனவே, பங்கேற்ற 2 அமைச்சர்களின் பதவியை, தமிழக முதல்வர் தகுதி நீக்கம்செய்யாவிடில், இந்து மக்கள் கட்சி, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும். தமிழகம் முழுக்க கண்டன போராட்டமும் நடத்தப்படும்" என்று அறிவித்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications