மனு ஸ்மிருதியா? குறுக்கே இந்த அர்ஜுன் சம்பத் வந்தா! விசிகவுக்கு போட்டியாக ஈவெரா மரண சாசனத்துடன் இமக!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மனு ஸ்மிருதியை மக்களுக்கு விசிக விநியோகித்து வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில் 'ஈவெரா மரண சாசனம் பக்கம் 21' விநியோகம் செய்ய முயன்ற இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆளுநர் ஆர்.என் ரவி சனாதனம், இந்து மதம் குறித்து பேசி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் மனு ஸ்மிருதி பிரதிகளை பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதன் தலைவர் திருமாவளவன் நேரடியாக களத்தில் இறங்கி பொது மக்களுக்கு மனு ஸ்மிருதி பிரதிகளை வழங்கி வருகிறார்

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாக 'ஈவெரா மரண சாசனம் பக்கம் 21' விநியோகம் செய்ய இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சென்னையில் வழங்க அக்கட்சியினர் திட்டமிடப்பட்டிருந்தனர்.

 ஈவெரா மரண சாசனம்

ஈவெரா மரண சாசனம்

இதனையடுத்து திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் திருக்கோயில் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர். அனுமதி பெற்று தான் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய வேண்டும் இல்லையேல் கைது செய்வோம் என்று இந்து மக்கள் கட்சி தொண்டர்களை தடுத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத்," தந்தை பெரியாரின் மரண சாசனம் 21ஆம் பக்கத்தை அர்ஜூன் சம்பத் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய போலீசார் அனுமதி மறுத்ததால் வேறு ஒரு நாள் அனுமதி பெற்று மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றார்.

திருமாவளவன்

திருமாவளவன்

ஆனால் திருமாவளவன் மட்டும் மனுஸ்மிருதி நூலினை பொதுமக்களுக்கு வழங்க மட்டும் ஏன் தடையில்லை. பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு மட்டும் அனுமதி ,பாதுகாப்பு அளிக்கின்றது. விசிக , திராவிடர் கழகம் மற்றும் கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு ஆதரவாக இந்த திமுக ஆட்சி உள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும் நாளில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருமாவளவனுக்கு 500 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஏவல் துறை

ஏவல் துறை

ஆர்எஸ்எஸ் கொள்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல கடந்த வாரம் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும் அதே நாளில் திருமாவளவன் மனுஸ்மிருதி புத்தகங்களை அச்சடித்து விநியோகம் செய்தார். அவரை கைது செய்யவில்லை. காவல்துறை திருமாவளவனின் ஏவல் துறையாக மாறி இருக்கிறது. இதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். EWS சட்டத்திற்கும் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் ஏழை மக்களுக்கு 10 சதவீதம் கொடுப்பது செல்லும் என நீதிமன்ற தீர்ப்பையும் வரவேற்றுள்ளனர்.

உண்மையான மனு ஸ்மிருதி

உண்மையான மனு ஸ்மிருதி

தமிழகத்தில் இந்து கடவுளை தொடர்ந்து தவறாக பிரச்சாரம் செய்யபட்டு , இந்துகளின் மனதை புன்படுத்தியும் வருகின்றனர் எனவே கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி சனாதன இந்து எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது இதில் மடாதிபதிகள் , சன்னியாசி கலந்துகொள்ள உள்ளனர். உண்மையான மனு ஸ்மிருதியில் பெண்களை பற்றியும், உழைக்கும் மக்களைப் பற்றியும் எவ்வளவு உயர்வாகவும்,பல நல்லவிஷயங்கள் இருக்கின்றது.இதனை புத்தகமாக அச்சிட்டு வழங்குவோம்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+