நாளை சரண்டர் ஆகிடுறேன்.. ஓம்கார் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு! சென்னையில் கைது செய்த கோவை போலீஸ்!
சென்னை: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபாலின் நாக்கை அறுத்துவிடுவேன் என பேசிய ஓம்கார் பாலாஜியை சென்னையில் வைத்து கோவை போலீசார் கைது செய்துள்ளனர். முன்ஜாமின் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் உள்ள ஈஷா மையம் குறித்தும், அந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால், ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ஓம்கார் பாலாஜி, நக்கீரன் இதழ் குறித்தும், நக்கீரன் ஆசிரியர் குறித்தும் ஆவேசமாகப் பேசியிருந்தார். நக்கீரன் கோபாலின் நாக்கை அறுத்துவிடுவேன் என்றெல்லாம் ஓம்கார் பாலாஜி பேசி இருந்த நிலையில், அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், தன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யுமாறு ஓம்கார் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஓம்கார் பாலாஜி, புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தாமாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நாளை காலை கோவையில் சரணடைந்து விடுகிறேன். நான் சரணடைய கால அவகாசம் வேண்டும். போலீசார் பின்தொடர்ந்து வருகிறார்கள் என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்து மக்கள் கட்சி ஓம்கார் பாலாஜி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி, எந்த ஒரு இடைக்கால உத்தரவும் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை போலீசாரால், சென்னையில் கைது செய்யப்பட்ட ஓம்கார் பாலாஜி கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications