நம்பர் பிளேட்டை பிடுங்கி எறிஞ்சிட்டாங்க.. கொடியையும் காணோம்! இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் புகார்
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் போலீசில் புகார் தந்துள்ளார்
சென்னை: தன்னுடைய கார் நம்பர் பிளேட்டையும், கட்சியின் பொறுப்பு பிளைட்டையும், சமூக விரோதிகள் பிடுங்கி எறிந்துவிட்டதாகவும், அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ஆனந்த் போலீசில் புகார் தந்துள்ளார்.
ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி இசென்னை: தன்னுடைய கார் நம்பர் பிளேட்டையும், கட்சியின் பொறுப்பு பிளேட்டையும், சமூக விரோதிகள் பிடுங்கி எறிந்துவிட்டதாகவும், அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ஆனந்த் போலீசில் புகார் தந்துள்ளார்.ந்து மக்கள் கட்சி கண்டனத்தை தெரிவித்திருந்தது.
"கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக ஹிந்துக்களின் நம்பிக்கையும் காயப்படுத்தி வரும் நடிகர் சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிட வலியுறுத்தியும், இந்து மக்கள் கட்சி சார்பில் 11ம் தேதி (நேற்று) தமிழகம் முழுவதும் உள்ள இந்து உணர்வாளர்கள், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சென்னையில் நடிகர் சூர்யாவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்று அக்கட்சி அறிவித்து பரபரப்பையும் கூட்டியிருந்தது.

போலீஸ்
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் நா. ஆனந்த் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். அந்த புகார் மனுவில் உள்ளதாவது: நான் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சிறு வயது முதலே ஆர்எஸ்எஸ் வழியில் இந்துத்துவ பணிகளை செய்து கொண்டு வருகிறேன்.. இந்து மக்கள் கட்சியில் தொடக்க காலத்தில் இருந்தே பணியாற்றி வருகிறேன்..

அர்ஜுன்சம்பத்
மேலும் அதன் நிறுவனத்தலைவர், அர்ஜுன் சம்பத் அவர்களின் உதவியாளராகவும் இருந்து வருகிறேன்.. எனது கார் நேற்று என்னுடைய இல்லத்தின் வெளியே நிறுத்தி வைத்து இருந்தேன்.. காலை வந்து எனது காரை நான் எடுக்கும்போது, காரின் முன் நம்பர் பிளேட் மற்றும் கட்சியின் பொறுப்பு பிளேட் இரண்டையும் சமூக விரோதிகள் வேண்டும் என்றே, திட்டமிட்டு பிடுங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது..

நம்பர் பிளேட்
இந்து மக்கள் கட்சியின் சார்பிலே இந்த தொடர் கனமழையில் தொடர்ந்து களப்பணியில் பொதுச்சேவை மற்றும் உணவு வழங்கி வந்து இருக்கிறோம்.. என்னுடன் கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள்... நேற்று கூட எனது காரின் நம்பர் பிளேட் இருந்து இருக்கிறது... யாரோ சமூக விரோதிகள் திட்டமிட்டு இதனை செய்து இருப்பார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.

குற்றவாளிகள்
ஆகையால் தாங்கள் இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசாரும், சம்பந்தப்பட்ட சமூக விரோதிகள் யார் என்பது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.. மாநில செயலாளரின் காரின் நம்பர் பிளேட்டை பிடுங்கி எறிந்த இந்த சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications