திருப்பரங்குன்றத்தில் மத கலவரத்தை தூண்ட சதியாம்! திமுக கூட்டணிக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
சென்னை: தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் நினைப்பதாகவும், இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்," அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தை புனிதமாக கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் வணங்கி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் முருகன் ஆலயமும், அதனுடன் உள்ள மலை மற்றும் வீதிகளும் திருப்பரங்குன்றம் முருகனுக்கே சொந்தம் என்றும், மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது, இருந்தாலும் அதனை அகற்றாமல் மேற்கொண்டு எந்த கட்டுமானமும் கட்டக் கூடாது எனவும் லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது சில இஸ்லாமிய அமைப்புகள் மேற்படி சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி அறுத்து கந்தூரி கொடுக்கப் போவதாக திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் விதத்தில் பிரச்சனை செய்து வருகின்றன. மேற்படி தர்காவில் ஆடு கோழி பலியிட்டு கந்தூரி கொடுத்ததற்கான எந்த விதமான ஆவணமும் 1920 முதல் நடைபெற்று வந்த நீதிமன்ற வழக்குகளில் தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்ட பல்வேறு அமைதி கூட்டங்களிலும் ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுத்து கந்தூரி கொடுக்கப்பட்டதாக எந்த ஆவணமும் இல்லை என்பதே உண்மையாகும்.
இதன் அடிப்படையிலேயே முன்னதாக மலையில் கந்தூரி கொடுக்கப்படும் என தர்கா நிர்வாகத்தால் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை வருவாய்த் துறையினர் அகற்றினர். மேலும் திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி கொடுக்க முயற்சித்த இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு அனுமதி மறுத்து நீதிமன்ற உத்தரவு பெற்று வருமாறு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையால் வலியுறுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட வகையில் மலை மீது பலி கொடுக்கும் எந்த விதமான வழக்கமும் இல்லாத போது வலுக்கட்டாயமாக திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப் போவதாக மீண்டும் சில இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் செய்திகள் வெளி வந்துள்ளன.
மேலும் திமுக கூட்டணி கட்சிகள், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிட்டு தந்தூரி விழா நடத்த ஆதரவாக செயல்படுவதுடன், இந்துக்கள் மீது அவதூறு பரப்பி அறிக்கைகள் வெளியிடுவது கண்டனத்துக்கு உரியது. தற்போது அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில் வேண்டுமென்றே எந்த விதமான நடைமுறையும் இல்லாமல் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளதன் மூலம் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் ஒரு பதட்ட சூழலையை உருவாக்கி மதக் கலவரத்தை ஏற்படுத்த திமுக கூட்டணி கட்சிகளும், ஜமாத் நிர்வாகமும் இணைந்து செயல்படுகிறதோ என்னும் ஐயம் எழுகின்றது.
மத நல்லிணக்கம் என்னும் பெயரில், வேற்று மதத்தினர் நடைமுறைகளை முருக பக்தர்களிடம் திணிப்பதை திமுக கூட்டணி கட்சிகள் கை விட வேண்டும். முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் வழிபாட்டுத்தலத்தை ஆக்கிரமித்து அதன் புனிதத்தை கெடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு திமுக மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications