அந்தர் பல்டி.. ராஜாவை விட இந்து மதம் பெரியது.. சூத்திரர் பற்றிய விமர்சனத்துக்கு நடிகை கஸ்தூரி பதிலடி
சென்னை: இந்துக்கள் குறித்து திமுக எம்பி ஆ ராசாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் நேற்று அவர் ட்வீட்டரில் 90 சதவீத இந்துக்களின் உரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என பதிவிட்டு இருந்தார். இதற்கு நடிகை கஸ்தூரி, அந்தர் பல்டி எனவும், எந்த அரசன் அல்லது ராஜாவை விடவும் இந்து மதம் பெரியது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது எனக்கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும், எம்பியாகவும் இருப்பவர் ஆ ராசா. இவர் பேசும் பேச்சுக்கள் அடிக்கடி விவாதப்பொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தும்.
இந்நிலையில் தான் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஆ ராசா பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நீ எனக்காக பிறந்தவள்.. போலீஸ்காரரின் மகளை மிரட்டி 3 வருடம் பலாத்காரம் செய்த போலி சாமியார்.. ஷாக்

விபச்சாரியின் மகன்
இந்த வீடியோவில் பேசும் ஆ ராசா, ‛‛நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்கள்?'' என்ற வகையில் பேசி இருந்தார்.

ட்வீட்டரில் ஆ ராசா பதிவு
இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் நாராயண் திருப்பதி உள்பட பலர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். ஆ ராசாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தோன் நேற்று ஆ ராசா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‛‛சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி-வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் - பரப்புரையாலும் 90 சதவீத இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்'' என பதிவிட்டு இருந்தார்.

நடிகை கஸ்தூரி விமர்சனம்
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆ ராஜா அந்தர் பல்டி அடித்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‛‛அந்தர் பல்டி யாதெனில்... எந்த அரசனை விடவும், ராஜாவை விடவும் இந்து மதம் பெரியது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. நேற்று இவர் சூத்திரன் விபச்சாரி மனக் என்று திட்டியது சொந்த கட்சியினரையும், குடும்பத்தினரையுமே அதிகம் பாதித்தது. எனவே இப்போது பாதுகாப்பான பொய்களை நோக்கி நாடுகிறார்'' என விமர்சனம் செய்துள்ளார்.

முன்பும் விமர்சித்த கஸ்தூரி
முன்னதாக நடிகை கஸ்தூரி ஆ ராசாவின் பேச்சு தொடர்பான வீடியோவுக்கும் கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது, ‛‛சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு" என்று காட்டமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.