கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போல.. இந்துக்களுக்கு புனித நூல் இல்லை.. திருமாவளவன் பரபர பேச்சு
சென்னை: கிறிஸ்தவர்களுக்கு பைபிள், முஸ்லீம்களுக்கு குர்ஆன் இருப்பது போல இந்துக்களுக்கு புனித நூல் எதுவும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமவளவன் பரபரப்பாக பேசியிருக்கிறார்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புனித நூல் இருப்பது போல இந்துக்களுக்கு புனித நூல் இல்லை என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் பேசியதாவது:-

இந்தியாவில் மேஜர் ஆக இருக்கக் கூடிய பெரும்பான்மை மதங்கள் இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம். இந்த மதங்களுக்கு என்று தனித்தனி சட்டங்கள் இருக்கின்றன. திருமண சட்டம், வாரிசு உரிமை சட்டம், தத்தெடுப்பு சட்டம் அதேபோல கார்டியன் ஷிப் சட்டம், விவாகரத்து தொடர்பான சட்டம், பெண்களுக்கான உரிமைகள் தொடர்பான சட்டம். இந்த சட்டங்கள் முஸ்லீம்களுக்கு தனியேதான் இருக்க முடியும். இந்துக்களுக்கு தனியாகத்தான் இருக்க முடியும்.
ஏனெனில் ஒவ்வொரு மதங்களை சார்ந்த மக்களும், காலம் காலமாக அவர்கள் பின்பற்றிய பழக்கங்களை மரபுகளை பாதுகாத்திட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த சட்டங்கள். இதுபோல நாடாளுமன்றம் கூடி பெரும்பான்மை அடிப்படையில் மசோதா மீது விவாதம் நடத்தி சட்டம் இயற்றுவது என்பது நூறாண்டுகளுக்கு முன்பு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது.
அந்தந்த மதங்களை சார்ந்த புனித நூல்கள் என்ன சொல்கிறதோ... அவர்களின் சட்ட நூல்கள் என்ன சொல்கின்றனவோ அவற்றை பின்பற்றி அந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டார்கள். முஸ்லீம்களுக்கு குர்ஆன் என்ன சொல்கிறதோ அதுதான் வாழ்க்கை முறை, கலாசார முறை, திருமண முறை, விவாகரத்து முறை, சொத்துரிமை முறை, தத்தெடுத்தல் முறை, பாதுகாவல் முறை இவை எல்லாம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள முறை.
கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதுதான் வாழ்வியல் முறை. இந்துக்களுக்கு புனித நூல் கிடையாது. முஸ்லீம்களுக்கு குர்ஆன் இருக்கிறது. பகவத் கீதை மட்டும் தான் இருப்பதாக சொல்கிறார்கள். அது வைணவர்கள் பின்பற்றக்கூடியது. சைவர்கள் பின்பற்றக்கூடியது அல்ல. கிருஷ்ண பராமாத்மா சொன்னது.. அர்ஜூனனுக்கு உபதேசித்தது. ஆகவே பகவத் கீதை நாமம் போடக்கூடியவர்கள் படிக்கிற ஒரு புனித நூல்.
ஆனால் பட்டை போடுகிற திருநீறு அணிந்த சைவ மக்களுக்கு அப்படி ஒரு புனித நூல் இருப்பதாக தெரியவில்லை. இப்போது பொதுவாக இந்து என்று சொல்கிறோம். ஆனாலும் இந்து சமூகத்திற்கு ஒரு சட்டம் இருந்தது அதை மன்னர்கள் பின்பற்றி வந்தார்கள், அந்த சட்டத்தின் அடிப்படையில் தான் இந்து கலாசாரம் இங்கு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.. அந்த சட்டம் எது.. அதுதான் மனுஸ்மிருதி. அதுதான் வராணாசிரம தருமத்தை சொல்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications