சென்னை ஆவடியில் ரவுடி வெட்டிக்கொலை.. இரவில் நடந்த ஷாக் சம்பவம்! என்ன நடந்தது?
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நேற்று இரவு ரவுடி தினேஷ் என்பவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலி மைதானத்துக்கு வருமாறு அழைத்து சென்று ரவுடி தினேஷை வெட்டி படுகொலை செய்துள்ளனர். தினேஷ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 20). ரவுடியான இவருக்கு ஜொள்ளு என்ற பெயரும் உண்டு. ரவுடி தினேஷ் மீது 14க்கும் மேற்பட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரவுடி தினேஷை நேற்று இரவு மர்ம கும்பல் சிலர் வெட்டி படுகொலை செய்தனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தினேஷ் உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பலினர் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், அப்பகுதி மக்கள் ஆவடி டேக்பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரியவில்லை. ரவுடி தினேஷ் மீது ஏற்கனவே பல வழக்குகள் போலீஸ் நிலையத்தில் இருப்பதால், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்!












Click it and Unblock the Notifications