சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை.. இன்று மாணவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகைக்கான தேர்வு
சென்னை: தமிழ்நாட்டில் 8 ஆம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தோ்வு இன்று நடைபெற உள்ளதை தொடர்ந்து சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்) கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இதற்காக மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தோ்வு நடத்தப்படுவது வழக்கம். இந்தத் தோ்வில் தமிழ்நாட்டில் 6,695 போ் தேர்வு செய்யப்படுகின்றனர். நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளன.

இதில் தேர்வாகும் மாணவர்கள் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை கிடைக்கும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து இன்று என்எம்எம்எஸ் தோ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. 2.31 லட்சம் மாணவா்கள் இந்தத் தோ்வை எழுதவுள்ளனா். தமிழ்நாடு முழுவதும் 850 தோ்வு மையங்கள் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் 35 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த சென்னையில் மிக்ஜாம் புயலால் விடப்பட்ட தொடா் விடுமுறையை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்தபடி சென்னையில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் 35 மையங்களில் என்.எம்.எம்.எஸ் தோ்வு நடைபெற உள்ளது. இதில் சுமாா் 700 ஆசிரியா்கள் பணியில் ஈடுபட உள்ளனா். இதன் காரணமாக சென்னையில் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்ரவரி 10 ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications