பொங்கல் பண்டிகைக்கு எத்தனை நாட்கள் லீவ்.. விடுமுறையை நீட்டிக்கிறதா தமிழக அரசு?
சென்னை: பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதில் பொங்கல் விடுமுறையாக செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் விடுமுறை உள்ளது. வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், கூடுதலாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்றும், பொங்கல் பண்டிகையையும் ஒரு வாரத்திற்கு கொண்டாட முடியும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும். சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். நடப்பு ஆண்டிலும் அதே உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். பொங்கல் பண்டிகையை பொறுத்தவரை பிற பண்டிகையை போல அல்லாமல் தொடர்ந்து விடுமுறை விடப்படும்.
3 நாட்கள் விடுமுறை
இந்த ஆண்டு போகி பண்டிகை ஜனவரி 13 திங்கள் கிழமை வருகிறது. 14 ஆம் தேதி (தை 1) பொங்கல், மறுநாள் திருவள்ளுர்வர் தினம் மாட்டுப்பொங்கல் (ஜனவரி 15), உழவர் திருநாள் (ஜனவரி 16) என மூன்று நாட்கள் அரசு விடுமுறை தினமாகும். ஜனவரி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாகும். எனவே 17 ஆம் தேதி அரசு விடுமுறை அளித்தால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு கொண்டாட சென்றவர்களுக்கு கூடுதல் விடுமுறை கிடைக்கும்.
ஜாக்டோ ஜியோ கோரிக்கை
அதாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை என்பதால் கிட்டதட்ட ஒரு வாரத்திற்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியும். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், "ஜனவரி 14 - 19 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை இருந்தால் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பொங்கல் பண்டிகயை சிறப்பாக கொண்டாட முடியும். இது தொடர்பாக முறையான கோரிக்கையை ஜனவரி முதல் வாரத்தில் அரசிடம் வைக்கப்படும்" என்றார்.
அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
முன்னதாக கடந்த தீபாவளி பண்டிகையின் போதும் அரசு ஊழியர்களுக்கு திடீர் சர்ப்ரைசை கொடுத்தது தமிழக அரசு. அதாவது, தீபாவளி பண்டிகையை சிறப்பாக கோண்டாடும் வகையில், நவம்பர் 1 ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என உத்தரவிட்டது. எனவே இதன் அடிப்படையில் பொங்கல் விடுமுறையும் நீட்டிக்கப்படும் என்ற எதிபார்ப்பு அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications