ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ரூ.1,36,805 லாபம்.. சின்ன கணக்கு பாருங்க
சென்னை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகிய கடன்களின் வட்டி குறைய போகிறது. தனிநபர் கடனை பொறுத்தவரை கடன் புதிதாக வாங்கினால் தான் குறையும். ஏற்கனவே உள்ள கடன் வட்டி விகிதம் குறையாது. வீட்டுக்கடன்கள் கண்டிப்பாக குறைய வாய்ப்பு உள்ளது. சுமார் 36 லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு வீட்டுக்கடன் வட்டி 20 வருடத்தில் எவ்வளவு குறையும் என்பது குறித்து சிறிய கணக்கு ஒன்றை பார்ப்போம்.
கொரோனா காலம் முன்பு வரை உலகம் வேறுமாதிரி இருந்தது. வேலை உறுதியாக இருந்தது..சம்பளமும் பலருக்கு உறுதியாக இருந்தது. ஆனால் கொரோனா காலத்திற்கு பிறகு . வேலை நிச்சயமின்மை, வருமான நிச்சயமின்மை ஆகியவை நாடு முழுவதும் அதிகரித்துவிட்டது. நீண்ட காலக் கடன் பெறுவது என்பதும், அதை பல வருடங்களுக்கு வைத்து கட்டுவது என்பது இப்போது பெரிய சவாலாக உள்ளது. எனினும் வீடு கட்ட கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. அடுக்குமாடி வீடு அல்லது தனி வீடு வாங்குவது சென்னை, கோவை போன்ற நகரங்களில் அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இரண்டாவது முறையாக குறைத்துள்ளது. பிப்ரவரி 7 அன்று 6.5% இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் 0.25 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த வரிவிதிப்பு உலக பொருளாதாரத்தையே ஆடிப்போக வைத்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளதன் மூலம் வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்துள்ளது.
நீண்ட கால அடிப்படையில் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு இரண்டாவது முறையாக பெரிய லாபம் கிடைத்துள்ளது. நண்பர் ஒருவர் எல்ஐசியில் 36.48 லட்சம் வீட்டுக்கடன் அண்மையில் வாங்கினார். அவருக்கு வட்டி விகிதம் 8.25 சதவீதம் ஆகும். அவர் மாதம் 31,083 ரூபாய் இஎம்ஐ கட்டி வருகிறார். இதன்படி 20 வருடங்கள் வட்டியாக மட்டும் 38,12,005 ரூபாய் கட்டி முடிப்பார். அசல் வட்டி சேர்த்து மொத்தமாக 74,60,005 கட்டி முடிப்பார்.
அதேநேரம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 25 புள்ளிகள் குறைந்துள்ளதால், விரைவில் எல்ஐசி, எஸ்பிஐ உள்பட பல்வேறு நிதி நிறுவனங்கள் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை 25 சதவீதம் குறைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி குறைத்தால் வட்டி விகிதம் 8 சதவீதமாக மாறும். அதன்படி பார்த்தால் மாதம் இஎம்ஐ 30,513 ஆக குறைந்துவிடும். அதேபோல் 20 வருடங்கள் முடிவில் வட்டியாக 36,75,200 மட்டுமே கட்டியிருப்பார். ஒட்டுமொத்தமாக 73,23,200 ரூபாய் தான் கட்டுவார். அதாவது வீட்டுக்கடன் வட்டி குறைப்பால் 1,36,805 ரூபாய் லாபம் கிடைக்கும்.
அதேநேரம் கடந்த ஜனவரி மாதம் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை வட்டி விகிதம் குறைப்பு பலனை பெற்றுள்ளார்கள். அந்த வகையில் அவர்களுக்கு சுமார் 2.70 லட்சம் வரை லாபம் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. இஎம்ஐ தொகையை கூடுதலாக கட்டுவதன் மூலம் முன்கூட்டியே வீட்டுக்கடனை அடைக்க முடியும். ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்தால் பாதி ஆண்டுகளில் கடனை அடைத்துவிட முடியும்.. அப்படித்தான் பலர் கடனை அடைத்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications