ஹனி டிராப்பிங்.. மிசோரம் அழகியை வைத்து விரித்த வலை.. வசமாக சிக்கிய ரவுடி.. கடைசியில் நடந்த கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிசோரம் அழகியை வைத்து புழல் காவாங்கரை ரவுடியை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

புழல் காவாங்கரையைச் சேர்ந்த ரவுடி சத்யா. இவர் கடந்த 10ஆம் தேதி இரவு எழும்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள குளிர்பான கடையின் பக்கத்தில் மோட்டார் சைக்கிளில் சத்யா அமர்ந்துக் கொண்டிருந்தார்.

Honey trapping: Chennai Puzhal Rowdy was killed by another gang in Egmore

அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சத்யாவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசின்பிரிட்ஜ் பகுதியில் கொல்லப்பட்ட நாய் ரமேஷ் கொலையில் சத்யா முக்கிய குற்றவாளியாவார்.

இதையடுத்து அவரை தீர்த்துக் கட்டுவதற்காக நாய் ரமேஷின் ஆதரவாளர்கள் திட்டமிட்டனர். இதற்காக கடந்த 8ஆம் தேதி நாய் ரமேஷின் 3ஆவது நினைவு தினம் என்பதால் சமாதியில் அந்த கும்பல் குடித்துவிட்டு சபதம் எடுத்தனர். இதையடுத்து நாய் ரமேஷ் ஆதரவாளர்களில் ஒருவர் தனக்கு மிசோரம் மசாஜ் சென்டர் அழகியை தெரியும். அவரை வைத்து காரியத்தை கச்சிதமாக முடிக்கலாம் என கூறியுள்ளார்.

சத்யா சபலபுத்தி கொண்டவர். எனவே அவரை அந்த அழகி ஜூலியை வைத்து ஸ்கெட் போட்டு தூக்கலாம் என நாய் ரமேஷ் ஆதரவாளர்கள் முடிவு செய்திருந்தனர். மிசோரம் அழகிக்கு ரூ 1 லட்சம் பணம் தருவதாகவும் இவர்கள் ஆசைக்காட்டியுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாய் ரமேஷ் கொலை சம்பவத்திற்கு பிறகு சத்யா புழல் காவாங்கரையிலிருந்து தண்டையார்பேட்டை பகுதிக்கு குடிபெயர்ந்தார். இருப்பினும் சத்யாவை கொலை செய்ய அவரது ஆதரவாளர்கள் திட்டம் தீட்டி வந்தனர். இந்த நிலையில் சத்யாவின் செல்போன் எண் கிஷோர் என்பவருக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து அவரது இன்ஸ்டாகிராம் ஐடியை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த ஐடி மூலமே சத்யாவை அழகியிடம் சிக்க வைக்க பிளான் செய்தனர். இதன் மூலம் கிஷோருக்கு மிசோரம் அழகி நன்கு அறிமுகமானார். சத்யாவின் இன்ஸ்டாகிராம் ஐடியை ஜூலியிடம் கிஷோர் கொடுத்துள்ளார். அப்போது சத்யா எனக்கு பணம்ர தர வேண்டியிருக்கிறது, நான் அழைத்தால் வரமாட்டான், எனவே நீ அவனுடன் இன்ஸ்டாவில் பேசி பழகி நேரில் பார்க்க வேண்டும் என கூறி தனியே வரவழைக்க வேண்டும்.

அப்படி மட்டும் சத்யாவை தனியாக வரவழைத்துவிட்டால் ரூ 1 லட்சம் தருகிறோம் என கூறியுள்ளார். இதையடுத்து சத்யாவின் இன்ஸ்டாகிராமில் ஹாய் என அழைத்து ஜூலி பேச தொடங்கியுள்ளார். அப்போது தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதில் சத்யா மயங்கியதாக தெரிகிறது.

உடனே சத்யாவிடம் ஜூலி நேரில் பார்க்க வேண்டும் என கூறி அழைத்துள்ளார். இதையடுத்து தண்டையார்பேட்டையிலிருந்து மோட்டார் சைக்கிளில் எழும்பூருக்கு சென்ற சத்யா மணிக்கணக்கில் ஆனது. இதனால் கடுப்பான சத்யா, ஜூலிக்கு போன் செய்து லேட்டாகிறது. இன்னொரு நாள் பார்க்கலாம் என கூறியுள்ளார். அப்போது ஜூலியோ நான் பக்கத்தில் வந்துவிட்டேன். நீ ஏதாவது சாப்பிடு என சொல்லியுள்ளார்.

அதற்கு சத்யா என்னிடம் பணம் இல்லை என கூறியிருந்தார். உடனே கிஷோரிடம் இருந்து ரூ 1000 பெற்று தனது வங்கிக் கணக்கு மூலம் சத்யாவுக்கு ஜூலி அனுப்பியுள்ளார். இதையடுத்து கிஷோர், கொலையாளிகள் சம்பவ இடத்திற்கு சென்று சத்யாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டனர். இந்த வழக்கில் மிசோரம் அழகி ஜூலி உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் நாய் ரமேஷின் தம்பி ரூபன், அண்ணன் மகன் டேவிட், அருண், புழல் சரவணன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+